பழம்பெரும் பாடகர் மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் திரையுலகம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 17, 2020, 7:51 PM IST
Highlights

தனது வாழ்நாளில் பெரும் பகுதிகளை இசைக்காக அர்பணித்த மாபெரும் கலைஞர். ஜஸ்ராஜ் மரணமடைந்த செய்தி கேட்டு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். 

இந்தியாவின் பழம் பெரும்  பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவில் வசித்து வந்தார். நியூஜெர்ஸியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த ஜஸ்ராஸ் இன்று காலை 5.15 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் புகழ் பெற்ற பாடகரான இவர் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், பத்ம பூஷன் உள்ளிட்ட பல உரிய விருதுகளை பெற்றுள்ளார். ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் 1930ம் ஆண்டு ஜனவரி 28 ம் தேதி பிறந்த அவருக்கு தற்போது வயது 90 என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்நாளில் பெரும் பகுதிகளை இசைக்காக அர்பணித்த மாபெரும் கலைஞர். ஜஸ்ராஜ் மரணமடைந்த செய்தி கேட்டு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். 

ஜஸ்ராஜ் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பண்டிட் ஜஸ்ராஜ்யின் துரதிர்ஷ்டவசமான மறைவு இந்திய கலாச்சாரத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. பிற பாடகர்களுக்கு வழிகாட்டியாகவும், அடையாளமாகவும் விளங்கியவர். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார். 

The unfortunate demise of Pandit Jasraj Ji leaves a deep void in the Indian cultural sphere. Not only were his renditions outstanding, he also made a mark as an exceptional mentor to several other vocalists. Condolences to his family and admirers worldwide. Om Shanti. pic.twitter.com/6bIgIoTOYB

— Narendra Modi (@narendramodi)
click me!