குடும்பத்துடன் திருக்கடையூரில் சுவாமி தரிசனம் செய்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!

By manimegalai a  |  First Published Sep 1, 2023, 3:52 PM IST

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தன்னுடைய தங்கை, மனைவி, தந்தையுடன் திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். 
 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவரைத் தொடர்ந்து இவருடைய தங்கை பவானி ஸ்ரீயும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விசாரணை' திரைப்படம் இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Latest Videos

ஜீவானந்தம் தான் ஈஸ்வரிய காதலித்தவன்.! குணசேகரனுக்கு தெரிய வரும் உண்மை! அடுத்து நடக்க போவது என்ன?

ஜிவி பிரகாஷின் அம்மா ஒரு இசையமைப்பாளர், மனைவி சைந்தவி ஒரு பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. கலை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜிவி பிரகாஷின் தாய் மாமா தான் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான். நடிப்பு மற்றும் இசை என படு பிசியாக இருக்கும் ஜிவி பிரகாஷ்,  திரையுலகை தாண்டி பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறார். அதேபோல் எந்த ஒரு பிரச்சனை என வந்தாலும், தன்னுடைய கருத்தை ஒளிவு மறைவில்லாமல் கூறுபவர்.

ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவிலா கிட்ட கூட வர முடியாது! பணக்கார நடிகை ஜெயலலிதாவின்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் தன்னுடைய மனைவி சைந்தவி, தங்கை பவானி, மற்றும் தந்தையுடன் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான  அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார். பொதுவாக இந்த கோவிலில் 60, 80,100 வயதி நிரம்பிய தம்பதிகளின் மணிவிழா நடப்பது வழக்கம். அதேபோல் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் ஆயுள் நீடிக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு. உலக அளவில் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு தன்னுடைய குடும்பத்துடன் வந்து ஜிவி பிரகாஷ் வழிபாடு செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

click me!