“இது அனிருத் இல்ல, மினிருத்”.... ரஜினியின் பேவரைட் கெட்டப்பில் அனிருத் வெளியிட்ட அசத்தல் போட்டோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 25, 2020, 05:43 PM IST
“இது அனிருத் இல்ல, மினிருத்”.... ரஜினியின் பேவரைட் கெட்டப்பில்  அனிருத் வெளியிட்ட அசத்தல் போட்டோ...!

சுருக்கம்

இந்நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தின் அசத்தல் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவின் சித்தி மகனான அனிருத்தின் இசை ஆர்வத்தை ஒட்டுமொத்த குடும்பமே ஆதரித்ததால் இன்று தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். குறும்படங்களுக்கு இசையமைத்து வந்த அனிருத்திற்கு தனுஷ் தனது மூணு படம் மூலம் அறிமுகம் கொடுத்தார். 

 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

‘3’ படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதிலும்  “வை திஸ் கொலவெறி டி” பாடல் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி உலக அளவில் ஹிட்டானது. தொடர்ந்து மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்க மகன், ரெமோ, நானும் ரெளடி தான், காக்கி சட்டை என அடுத்தடுத்து ஹிட் கொடுக்க ஆரம்பித்தார். 

 

இதையும் படிங்க: “சிறுத்தை” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது?.... கண்ணுபடும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  “அண்ணாத்த” மற்றும் தளபதி விஜய்யின்  “மாஸ்டர்” ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். கோலிவுட் டாப் ஸ்டார்களின் படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகத்தின் கவனமும் அனிருத் மீது திரும்பியுள்ளது. சமீபத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மகத்துடன் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக இருந்த அனிருத்தின் போட்டோ தாறுமாறு வைரலானது. 

 

இதையும் படிங்க: பிரபல நடிகருடன் ஜோடி போட்ட சாய் பல்லவி... வயிற்றெரிச்சலில் வாயை விட்ட ராஷ்மிகா மந்தனா...!

இந்நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறுவனாக இருந்த போது வெள்ளை பைஜாமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் நின்றிருக்கும் அந்த போட்டோ லைக்குகளை வாரிக்குவிக்கிறது. அத்துடன் இதற்கு பிறகு நான் வளரவே இல்லை என சொல்கிறார்கள் #minirudh என பதிவிட்டுள்ளார். ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் இந்த சின்ன வயசு போட்டோவிலாவது அனிருத் ஒல்லியாக இல்லாமல், பார்க்க கொஞ்சம் கொழு, கொழுன்னு இருக்கார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!
இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!