'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலை வெளியிட்ட நடிகர் கார்த்தி..! வீடியோ

Published : May 08, 2021, 06:41 PM IST
'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலை வெளியிட்ட நடிகர் கார்த்தி..! வீடியோ

சுருக்கம்

இயக்குனர் கே.பாக்யராஜ் மகன் சாந்தனு, தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இந்த ஆண்டு பொங்கலுக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் 'தங்கம்' என்கிற வெப் சீரிஸிலும் இவருடைய நடிப்பு பாராட்ட பட்டது.   

இயக்குனர் கே.பாக்யராஜ் மகன் சாந்தனு, தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இந்த ஆண்டு பொங்கலுக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் 'தங்கம்' என்கிற வெப் சீரிஸிலும் இவருடைய நடிப்பு பாராட்ட பட்டது. 

தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர், தற்போது ராவணக் கோட்டம், முருங்கைக்காய் சிப்ஸ், ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'முருகைக்காய் சிப்ஸ்' படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, முதல் சிங்கள் பாடல் மற்றும் ட்ரைலர் ஆகியவை வெளியான போதிலும், இன்னும் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமல் உள்ளது. தற்போது திரையரங்குகள் கொரோனா இரண்டாவது அலை காரணமாக மூடப்பட்டு விட்டதால், திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகே, ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், அதுல்யா ரவி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், ஊர்வசி, மனோ பாலா, யோகி பாபு, மயில்சாமி, மதுமிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கியுள்ள இந்த இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் 'எதோ சொல்ல' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை பிரபல நடிகர் கார்த்தி, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்க்கு சந்தனு நன்றி என கூறி உள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான, முதல் சிங்கிள் மற்றும் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது போல், இந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dhanush : பிரேக் அப் செய்து பிரிந்தார்களா தனுஷ் - மிருணாள் தாக்கூர்? காட்டுத்தீ போல் பரவும் தகவல்
Nooru Saami vs Engal Thangam Day 1 Box Office : சமந்தா vs விஜய் ஆண்டனி... முதல் நாள் வசூலில் வின்னர் யார்?