கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும்... கடிதம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பாக்யராஜ்!

Published : May 08, 2021, 06:06 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும்... கடிதம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பாக்யராஜ்!

சுருக்கம்

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வரும் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 125 தொகுதிகளில் திமுக தனித்து மெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து தமிழக முதலமைச்சராக நேற்று, சென்னை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்ற முக ஸ்டாலின், அடுத்தடுத்து பல அதிரடி திட்டங்களை போட்டு அசரவைத்து வருகிறார். கண்டிப்பாக தமிழகம், கொரோனாவில் இருந்து விடுபடும் என்கிற நம்பிக்கையை கொடுத்துள்ளது ஸ்டாலினின் புதிய ஆட்சி. அதே போல் புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஸ்டாலினை சந்தித்து பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வரும் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்து கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: "உயர்திரு முக ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடன் வாழ்த்துகளுடன் உங்கள் பாக்யராஜ் எழுதுவது. பொறுத்தார் பூமி ஆள்வார், ஆளும் பொறுப்பு தங்களை தேடி வர அப்பாவின் ஆசை கனிந்துள்ளது. அதைவிட தங்களது தன்னம்பிக்கையும் தளராத உழைப்புமே மிக மிக உன்னதமானது என மனம் நெகிழ்கிறது. தேர்தல் முடிவு வந்ததுமே சந்தித்து வாழ்த்த நினைத்தேன். ஆனால் எனக்கு இருந்த நோயின் அறிகுறி, சளி தொல்லை காரணமாக தங்களை அசெளகர்யப்படுத்த விரும்பாது தவிர்த்தேன். இப்போது அதிகாரபூர்வமாக தொற்று உறுதியானதால் காலதாமதமின்றி கடிதம் மூலமாக வாழ்த்துகிறேன்.

தமிழ் சமுதாயத்தை சீரமைக்கவும் சிறப்பான சேவை பணியாற்றிய அப்பாவின் எழுத்தாணியுடன் அன்பு மகனாக தாங்கள் அனைத்து தமிழ் தாய்மார்களின் சுமை குறைத்து, கொரோனா நோயாளிகள் துயர் துடைக்கும் பொருட்டு நிறைவான பால் வார்த்து விட்டீர்கள், குறைவான விலையில். நெகழ்வாக இருந்தது. காவல்துறை நண்பர்கள் குறித்தும் கருணையுடன் பரிசீலித்து தருகிறீர்கள், மகிழ்வு.

எனது குடும்பத்தார், பாக்யா குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் குடும்பம் சார்பாக வாழ்த்துகிறேன். நிறைவான ஆட்சி அரங்கேறி நாடு நலம் பெற அப்பாவின் அருளும் இருக்கும் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dhanush : பிரேக் அப் செய்து பிரிந்தார்களா தனுஷ் - மிருணாள் தாக்கூர்? காட்டுத்தீ போல் பரவும் தகவல்
Nooru Saami vs Engal Thangam Day 1 Box Office : சமந்தா vs விஜய் ஆண்டனி... முதல் நாள் வசூலில் வின்னர் யார்?