
Murmar Box Office Collection : இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் நடிப்பில் கடந்த 7ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் மர்மர். முழுக்க முழுக்க த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் முதலில் 30 திரைகளில் மட்டும் வெளியிடப்பட்டது. சினிமாவைப் பொறுத்த வரையில் கதை மட்டும் நன்றாக இருந்தாலே அந்த படம் ஹிட் கொடுத்துவிடும். அதற்கு சிறந்த உதாரணமே லப்பர் பந்து தான். படத்தின் கதை ரொம்பவே சிம்பிள் தான். எடுக்கப்பட்ட விதமும், காட்சி அமைப்பும் ரசிகர்களை வியக்க வைத்தது.
Vasundhara Kashyap: நடிகை என்பதை தாண்டி புது அவதாரம் எடுத்த கங்குவா நடிகை வசுந்தரா காஷ்யப்!
இதே போன்று மிகவும் எளிமையான கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த படம் தான் மர்மர். 7 ஆம் தேதி வெளியான இந்தப் படம் முதல் நாளில் 30 திரையரங்குகளில் வெளியானது. அதுமட்டுமின்றி மர்மர் படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் ரூ.2.50 கோடி வரையில் வசூல் குவித்தது. த்கில் வீடியோக்களை தங்களது யூடியூப்பில் வெளியிட்டு வியூஸ் எடுக்கும் யூடியூப் பிரபலங்கள் ஒரு பௌர்ணமி நாளில் ஜவ்வாது மலைக்கு செல்கிறார்கள்.
Anna serial: பரணி போட்ட கண்டீஷன்; சண்முகம் தலையில் இடியை இறக்கிய சௌந்தரபாண்டி - அண்ணா அப்டேட்!
அங்கு மலைக்கிராமத்து பெண்ணின் உதவியுடன் காட்டிற்கு நடுவிலிருக்கும் குளத்தில் குளிக்க சப்த கன்னியர்கள் செல்கிறார்கள். ஆனால் அவர்களை குளத்தில் குளிக்க விடாமல் மங்கை என்ற ஆவி தடுக்கிறது. அதனை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவிட வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசை. அப்படி அவர்கள் நினைத்தது போன்று வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவிட்டார்களா? இல்லையா என்பது தான் படத்தோட மீத கதை. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இதுவரை எந்த தமிழ் படத்துக்கு செய்யாததை ‘ரெட்ரோ’ படத்துக்காக செய்த பூஜா ஹெக்டே!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.