
Murali and Vadivelu's 'Sundara Travels' Re-releasing on August 8: தாஹா இயக்கத்தில் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் சுந்தரா ட்ராவல்ஸ். மலையாளத்தில் வெளியான Ee Parakkum Thalika என்கிற படத்தின் ரீமேக் தான் சுந்தரா டிராவல்ஸ். இது ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ஆடியன்ஸை கவரும் விதமாக இதில் ஏராளமான நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்று இருந்ததால் இப்படம் தனித்து இருந்தது. இந்த நிலையில் சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
ரீ ரிலீஸ் ஆகும் சுந்தரா ட்ராவல்ஸ்
அதன்படி வருகிற ஆகஸ்ட் 8ஆம் தேதி சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தை பிரம்மாண்டமாக ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படம் முதன் முதலில் ரிலீஸ் ஆனதும் ஆகஸ்ட் மாதம் தான். அதனால் இந்த மாதத்தோடு இப்படம் ரிலீஸ் ஆகி 23 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக அதனை ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இந்த வாரம் பெரிய அளவில் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் சுந்தரா ட்ராவல்ஸ் படத்தை மறு வெளியீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தான். அப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அதனால் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் ஒரு வாரம் திரையரங்குகளில் தாக்குப் பிடிப்பது அதிசயம். அதனைக் கருத்தில் கொண்டு புதுப்படங்கள் பெரிய அளவில் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு பதிலாக சுந்தரா ட்ராவல்ஸ் போன்ற பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களில் சுந்தரா டிராவல்ஸ் படமும் ஒன்று. அதில் வடிவேலு செய்யும் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இந்த கிளாசிக் ஹிட் படத்தை தியேட்டரில் பார்க்க தவறியவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அதன் ரீ ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக ராதா நடித்திருந்தார். இப்படம் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.