புத்தம் புதிய ரியாலிட்டி ஷோ அறிமுகம் ; நடுவராக பின்னி பெடலெடுக்கும் பார்த்திபன்!

Published : Aug 06, 2025, 11:01 PM IST
Single Pasanga Reality Show

சுருக்கம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுப்போக்கு அம்சத்தை கொண்ட புத்தம் புதிய ரியாலிட்டி ஷோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சினிமாவைத் தொடர்ந்து சீரீயல்களிலும் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகின்றன. நாள்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில் குடும்ப பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரப்படுகிறது. அதையும் தாண்டி ஒவ்வொரு சேனல்களிலும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

அந்த வகையில் ஜீ தமிழ் இப்போது புதிய ரியாலிட்டி ஷோவை தொடங்கியுள்ளது. 'சிங்கிள் பசங்க' என்ற புதிய ரியாலிட்டி ஷோ, பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அதன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் வரிசையை வலுப்படுத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழாவை கொண்டாடும் விதமாக, சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 10 இளைஞர்கள் 'ஏஞ்சல்ஸ்' எனப்படும் பிரபலங்களுடன் ஜோடியாக இணைவார்கள். இந்த ஜோடிகள், அவர்களின் கவர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் தொடர்பு திறன்களை சோதிக்கும் வகையில், ஒவ்வொரு வாரமும் சவால்களை எதிர்கொள்வார்கள். போட்டியாளர்கள் மற்றும் ஏஞ்சல்ஸ் ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து போட்டி முழுவதும் இணைந்து செயல்பட்டாலும், நிபுணர்களின் குழு ஒன்றும் அவர்களை பின்னிருந்து வழிகாட்ட உள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில், நிகழ்ச்சியின் நடுவர்களான பார்த்திபன், ஆலியா மானசா, மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரும் தொகுப்பாளினி மணிமேகலையும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் வடிவம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி உலகில் இது எப்படி வித்தியாசமாக இருக்கும் என்பது குறித்து அனைவரும் தங்கள் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய நடுவர் பார்த்திபன், "சிங்கிள் பசங்க என்பது வெறும் காதல் பற்றிய நிகழ்ச்சி அல்ல. இது சுய கண்டுபிடிப்பு, மாற்றம் மற்றும் தன்னம்பிக்கை பற்றியது. இந்த இளைஞர்கள் தங்கள் வழக்கமான வட்டத்திலிருந்து வெளியே வந்து, தங்களைத் தாங்களே கண்டறிவதை பார்ப்பது ஊக்கமளிக்கிறது என்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சி மிகவும் வேடிக்கையாகவும், துணிச்சலானதாகவும், இன்றைய தலைமுறைக்கு மிகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது" எனவே சிங்கிள் பசங்க ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களின் வரிசையில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய அனுபவத்தை கொண்டு வரும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்பது குறித்து ஆலியா மானசாவிடம் கேட்ட போது அவர் காதலில் அனுபவம் உள்ளதால் போட்டியாளராக பங்கேற்கும் சிங்கிள் பசங்களுக்கு தேவையான விஷயங்களை சொல்லி தர முடியும் என நம்புவதாக தெரிவித்தார். மேலும் இது இசை, நடனம், நடிப்பு என அனைத்தும் கலந்த நிகழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ஸ்ருதிக்கா இது வித்தியாசமான நிகழ்ச்சியாக மக்களை கவரும், மாறுபட்ட கான்செப்ட்டில் இந்த நிகழ்ச்சி பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!