40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்தவர்... முண்டாசுப்பட்டி பட நடிகர் மதுரை மோகன் காலமானார் - சோகத்தில் திரையுலகம்

Published : Dec 09, 2023, 10:39 AM IST
40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்தவர்... முண்டாசுப்பட்டி பட நடிகர் மதுரை மோகன் காலமானார் - சோகத்தில் திரையுலகம்

சுருக்கம்

முண்டாசுப்பட்டி, வீரன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வந்தவர் மதுரை மோகன். பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவருக்கு முண்டாசுப்பட்டி திரைப்படம் தான் அடையாளம் கொடுத்தது. இதையடுத்து அண்மையில் வெளிவந்த வீரன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் மோகன்.

மதுரையை சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். அவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நடிகர் மதுரை மோகனின் மறைவுக்கு இறங்கல் தெரிவித்து நடிகர் காளி வெங்கட் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது : “ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும் “வீரன்” பட இயக்குனர் சரவண் அவர்களுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குனர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... முதல் நாளில் நயன்தாரா படத்தைவிட அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் கான்ஜுரிங் கண்ணப்பன்..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்