பிக் பாஸ் சீசன் 2வில் கலக்க வரும் கவர்ச்சி புயல்...! உறுதியான தகவல்..!

First Published Jun 13, 2018, 6:18 PM IST
Highlights
mumtaz parthicipate in big boss show


கடந்த ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட 'பிக்பாஸ்' நிகழ்ச்சி. ஆரம்பத்தில் ரசிகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் பின், பலரது கவனத்தையும் ஈர்த்து, அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது.

இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் என்று கூறலாம். இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. ஏற்கனவே பலரின் பெயர்கள் கொண்ட பட்டியல் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியானது.

தற்போது இந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ளார், பல இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கவர்ச்சி புயல் நடிகை மும்தாஜ். 

மும்தாஜ்க்கு ஏற்கனவே பிக் பாஸ் முதல் சீசனுக்கு அழைப்பு வந்தும், அந்த வாய்ப்பை அவர் மறுத்து விட்டார். ஆனால் தற்போது பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா, பரணி உள்ளிட்ட நடிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு திருப்பு முனையாக அமைந்ததால், இரண்டாவது சீசனில் கலந்துக்கொள்ளும் முடிவில் இருக்கிறார் என மும்தாஜின் நம்ப தகுத்த நட்பு வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

click me!