
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது முதல் முறையாக வெடித்துள்ளது சாப்பாட்டு பிரச்சனை. கடந்த சீசன் கூட சமையல் செய்வதில் பல பிரச்சனைகள் வந்தது, ஆனால் முந்தய போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது பிரச்சனை முன்பே வந்து விட்டது என தான் நினைக்க தோன்றுகிறது.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், நடிகை ஜனனி ஐயர், நீங்கள் உங்களுடைய டீம் ஆட்களை அழைத்து டிஸ்கஸ் பண்ண வேண்டும் என மிகவும் கோபமாக பேசுகிறார்.
இதனால், சமையல் செய்யும் குழுவின் இடையே எதோ பிரச்சனை வெடிக்கிறது. இதற்கு நடிகை மும்தாஜ், தான் இதை புகாராக கூறவில்லை என்று கூறி நான் முட்டாள் ரோபோ கிடையாது என கத்துகிறார்.
இதற்கு ஜனனி எதோ கூற வர, மும்தாஜ் தான் பேசும் போது யாரும் இடையே பேச வேண்டாம் என கூறுகிறார். மீறி தலைவி ஜனனி பேச வாய்யெடுத்த போது லீவ் இட் என கோபமாக கூறுகிறார் மும்தாஜ்.
பின் இந்த ப்ரோமோவில், நடிகர் பாலாஜியின் மனைவி நித்திய, நாளைக்கு என்ன பண்ணப்போகிறோம் என்பதை முன்பே தீர்மானித்துக்கொள்ளலாம் என கூற, மும்தாஜ் டன், போய் தலைவியிடம் சொல்லுங்கள் என மிகவும் சத்தமாக சிங்கம் போல் கர்ஜித்து அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.