தீபாவளி ரேசில் "தல தளபதி" முந்திக்கொண்டு வரும் சூர்யா! ஜெயிக்கப்போவது யார்?

 
Published : Jun 20, 2018, 03:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
தீபாவளி ரேசில் "தல தளபதி" முந்திக்கொண்டு வரும் சூர்யா! ஜெயிக்கப்போவது யார்?

சுருக்கம்

Diwali 2018 box-office clash Vijay versus Ajith versus Suriya

தமிழ் மக்களை பொருத்தவரை பண்டிகை என்றால் தனக்கு பிடித்த ஹீரோகள் படங்களோடு கொண்டாடுவது தான் புது ஆடை பட்டாசு பலகாரம் போல புது படம் கண்டிப்பாக தீபாவளிக்கு இருக்கவேண்டும். இது தமிழ் மக்களின் ஒரு வகை கொண்டாட்டம் என்று தான் சொல்லணும் தீபாவளி பொங்கலுக்கு படங்கள் ரிலீஸ் இல்லை என்றால் மக்கள் சோர்ந்து விடுவார்கள் அந்த பண்டிகை கலை கட்டாது. ஆனால் இந்த தீபாவளிக்கு கொஞ்சம் கடுமையான போட்டி காத்திருக்கிறது.

ஆமாம், ஒரு பக்கம் தல,  இன்னொரு பக்கம்  தளபதி  ஒரு பக்கம் சூர்யா என்று மூன்று ஹீரோகள் படங்கள் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொல்லுகிறார்கள். இது ஒரு பக்கம் மகிழ்ச்சி தான் அந்த அளவுக்கு திரையரங்கு இல்லை இன்று தமிழ் நாட்டில் அப்படி வெளியானால் மூன்று முக்கிய ஹீரோகள் படங்கள் வெளியானால், வசூல் பாதிக்கும் இது தயாரிபாலர்களுக்கு மிகுந்த பதிப்பை உண்டு பண்ணும், ஆகவே இது நடைமுறையில் சாத்தியம் ஆகுமா என்று பொருத்து இருந்து தான் பாக்கணும்.

இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் விஜய் படக்குழு மிகவும் வேகமாக செயல்படுகிறார்கள். படத்தை எப்படியும் தீபாவளி பரிசாக ரசிகர்களுக்கு தரவேண்டும் என்ற எண்ணத்தில் பயங்கர வேக மாக வேலைகள் நடந்து வருகிறது. அடுத்து சூர்யாவும் தன் பங்குக்கு மிகவும் வேகமாக செயல்படுகிறார்கள் என்று அவர்களின் இயக்குனரும் தயாரிப்பாளரும் அறிவித்துள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் "என்.ஜி.கே" தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளனர்.

என்.ஜி.கே. தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். என்.ஜி.கே படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படி இருக்கையில் அஜித் படம் "விஸ்வாசம்" படத்தை பற்றி இதுவரை எந்த வித தகவலும் இல்லை என்று தான் சொல்லணும் இதுவரை அவர்களின் அறிவிப்பு படி ஒரு கட்ட படபிடிப்பு தான் முடிவடைந்துள்ளது என்று தெரிவித்து உள்ளனர். இதனால் இந்த படம் சொன்ன தேதியில் அதாவது தீபாவளிக்கு படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் அஜித் ரசிகர்கள் படம் வெளியாகு ரன்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இந்த ரேஸில் இவர்களை தவிர வேறு படங்களும் வரும் என்று சொல்லிவருகிறார்கள் ஆகவே பொருத்து இருந்து தான் பாரக்கவேண்டும் ஆனால் சூர்யா விஜய் ரேஸில் கண்டிப்பாக உள்ளனர். இதில் யார் வெற்றி என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்