
பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் எல்லாம் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் தொடர்ந்து பிக் பாஸ் கொடுத்த டாஸ்குகள், பிக் பாஸ் போட்டியாளர்களிடையே சின்ன, சின்ன மன கசப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியில், ஜனனி ஐயர் ஜெயித்தது, மும்தாஜிற்கு கொஞ்சம் அதிருப்தி தான்.
இதனை சரியான சமயம் பார்த்து, அவர் வெளிக்காட்டி இருப்பது போல அமைந்திருக்கிறது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் பிரமோவில் இடம் பெற்றிருக்கும் சண்டை. இந்த பிரமோவில் நாளைக்கு என்ன சமைக்கனும்னு முன்னாடியே உங்க டீமிடம் கேட்டிருக்கனும். என ஜனனி ஐயர் கூறுகிறார்.
இதனால் கடுப்பான மும்தாஜ், கேட்க தான் செய்தேன். நான் ஒன்றும் ரோபோட் இல்லை. என கோபமாக கூறுகிறார். தொடர்ந்து இவர்கள் பேசும் போது பிரச்சனை அதிகரிக்கிறது. இந்த பிரச்சனையில் நித்யாவிற்கும் பங்கு இருப்பது போல, இந்த காட்சிகளை பார்க்கும் போது தெரிகிறது. இதில் ஜனனி இடையே பேசும்போது, கோபமான மும்தாஜ் ”நான் பேசும் போது யாரும் குறுக்கே பேசாதீன்ங்க” என கூறுகிறார்.
தொடர்ந்து நித்யா என்ன சமைக்க வேண்டும் என மும்தாஜிடம் கேட்கிறார். அதற்கு மும்தாஜ் அதை ஏன் என்கிட்ட கேக்கறீங்க? உங்க கேப்டன் கிட்ட கேளுங்க? என கோபமாக கூறுகிறார். இவர்கள் நடுவில் ஈகோவால் வெடித்திருக்கும் இந்த பிரச்சனை, எந்த அளவிற்கு செல்லப்போகிறது என, இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.