காலாவை விட மெர்சல் தான் பெஸ்ட்…! சொன்னது யார் தெரியுமா?

First Published Jun 20, 2018, 4:07 PM IST
Highlights
mersal is better than kala says famous director


சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் இதுவரை வெளியான திரைப்படங்களில், அதிகம் பரபரப்பை ஏற்படுத்திய படம் என்றால், அது காலா தான். மெட்ராஸ் பட இயக்குனர் ரஞ்சித் தான் காலாவை இயக்கி இருந்தார்.

இதனால் காலா மீதான மக்கள் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. ஆனால் படம் ரிலீசாகுவதற்கு சில தினங்கள் முன்பு, ரஜினி கொடுத்த பேட்டியினால் காலா படம் எதிர் பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. ஆனால் நல்ல விமர்சனங்களை பெற்றது .

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியின் போது தளபதி விஜய்-ன் அப்பாவும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருக்கும் கருத்து, இப்போது வைரலாகி இருக்கிறது.அந்த நிகழ்ச்சியின் போது அவர் “ காலா திரைப்படத்தை விட, மெர்சல் தான் பெஸ்ட்”. என தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர், இது போன்ற சமூக அக்கறை உள்ள படங்களின் வரவு, தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஒரு இயக்குனரான அவர் இப்படி கருத்து தெரிவித்திருப்பது, ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த அதிருப்தியை அளித்திருக்கிறது. இதனை தொடர்ந்து அவரை திட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். இது போன்ற பதிவுகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

click me!