ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? மீரா மிதுனை வெளுத்து வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர்!

Published : Aug 10, 2021, 06:41 PM IST
ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? மீரா மிதுனை வெளுத்து வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர்!

சுருக்கம்

இவரது ஆணவ பேச்சை வெளுத்து வாங்கியுள்ளார் பிரபல நகைச்சுவை, மற்றும் குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.   

சோசியல் மீடியாவில் தன்னை பற்றி அனைவரும் பேச வேண்டும் என எப்போதும் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருபர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் ஆரம்பித்து என் மூஞ்சியை எல்லா நடிகைகளும் திருடிட்டாங்க என பீதி கிளப்பியது வரை மீரா மிதுனின் பப்ளிசிட்டி அலப்பறைகள் அளவில்லாதது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவைப் பற்றியும், அவர்களது மனைவியான சங்கீதா, ஜோதிகா பற்றியும் மிகவும் தரக்குறைவாக பேசி மீரா மிதுன் வீடியோ வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. 

இதற்க்கு மன்னிப்பு கேட்டாலும், தொடர்ந்து ஓயாமல் ஏதேனும் ஒரு சர்ச்சை விவகாரத்தை அவிழ்த்து விட்டு, நெட்டிசன்கள் மத்தியில் திட்டு வாங்கவில்லை என்றால் இவருக்கு தூக்கமே வராதா என நினைப்பது போல் ஆகிவிட்டது நிலைமை. சமீபத்தில் பட்டியலின இயக்குனர்கள் குறித்து அவதூறு பேசியும்,  அவர்கள் மனம் புண் படும் வகையிலும் ஒரு வீடியோவில் பேசி இருந்தார். இதற்க்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் கண்டனங்கள் குவிந்தது. 

மேலும் செய்திகள்: விக்னேஷ் சிவனுடன் எங்கேஜ்மெண்ட் முடிச்சிடுச்சா? நயன்தாராவே சொல்லிட்டாங்க... வைரலாகும் வீடியோ..!!
 

மேலும் இவரை கைது செய்ய வேண்டும் என, மதுரை, சென்னை போன்ற இடங்களில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இவரது ஆணவ பேச்சை வெளுத்து வாங்கியுள்ளார் பிரபல நகைச்சுவை, மற்றும் குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். 

மேலும் செய்திகள்: ஜொலிஜொலிக்கும் குட்டை உடையில் செம்ம பார்ட்டி..!! வித்யுலேகா ராமனின் அட்டகாச ஹாட் போட்டோஸ்..!!
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... "என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு? உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாக கேட்பார்கள். ஆனால் மீரா மிதுன் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல, வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம். சாதிப் பெயரை சொல்லி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும் போது, இவர் ஏன் இவ்வளவு ஆணவமாக பேசுகிறார்?

சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது? பெருமதிப்பிற்குரிய என் தெய்வம் ‘கலைஞானி’ கமலஹாசன் அவர்கள் தன்னை ஒரு படத்திலிருந்து ஒதுக்கித்தள்ளி விட்டார் என்று இவர் கூறியிருப்பதை கேட்டு அழுவதா, சிரிப்பதா? ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? என்ன மூடத்தனமான பேச்சு இது? தளபதி விஜய், தம்பி சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானி அவர்களா?

மேலும் செய்திகள்: பிறந்தநாளில்... உச்ச கட்ட கவர்ச்சியில் எல்லை மீறிய ஹன்சிகா!! பிகினி உடையில் வெளியிட்ட படு மோசமான புகைப்படம்!!
 

"குறிப்பிட்ட சாதியினரை திரை உலகை விட்டு துரத்த வேண்டும்" என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இவரது பேச்சு மனதை புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல, மடத்தனம். அகங்காரத்தின் உச்சம். மற்றவர்கள் மனதை புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம். இத்தகைய பேட்டிகளை யூ ட்யூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம். மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரை கண்டிக்கிறேன். இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்" என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!