நுழைவு வரி மொத்தத்தையும் கட்டிய தளபதி விஜய்.! எத்தனை லட்சம் தெரியுமா?

By manimegalai aFirst Published Aug 10, 2021, 6:01 PM IST
Highlights

நடிகர் விஜய் தன்னுடைய சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து 50 சதவீதம் விளக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது விஜய் தன்னுடைய நுழைவு வரி மொத்தத்தையும் செலுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

நடிகர் விஜய் தன்னுடைய சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து 50 சதவீதம் விளக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது விஜய் தன்னுடைய நுழைவு வரி மொத்தத்தையும் செலுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தளபதி விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து,  காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை  விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார். 

மேலும் செய்திகள்: ஜொலிஜொலிக்கும் குட்டை உடையில் செம்ம பார்ட்டி..!! வித்யுலேகா ராமனின் அட்டகாச ஹாட் போட்டோஸ்..!!
 

மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா  நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி ஏற்கனவே பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தான், தானும் நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்: விக்னேஷ் சிவனுடன் எங்கேஜ்மெண்ட் முடிச்சிடுச்சா? நயன்தாராவே சொல்லிட்டாங்க... வைரலாகும் வீடியோ..!!
 

மேலும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன்  விசாரணைக்கு வந்தபோது, ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை தான் முழுமையாக ஏற்பதாகவும், நீதிமன்றத்தை நாடியதற்காக விதித்த ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் தனி நீதிபதியின் விமர்சனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் முன்வைத்தார். 

மேலும் செய்திகள்: பிறந்தநாளில்... உச்ச கட்ட கவர்ச்சியில் எல்லை மீறிய ஹன்சிகா!! பிகினி உடையில் வெளியிட்ட படு மோசமான புகைப்படம்!!
 

ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை றது செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும் விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை வணிகவரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும் என்றும் மீதமுள்ள 80 சதவீதத் தொகையை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது நுழைவு வழியாக ரூபாய் 40 லட்சம் வரை செலுத்தியுள்ளதாக வணிகவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் எட்டு லட்ச ரூபாயையும், அதன்பிறகு 32 லட்ச ரூபாய் என முழுமையாக நுழைவுவரியை விஜய் செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

click me!