
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஏற்கனவே இந்த சீரியலில் மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை என மூன்று ஜோடிகள் உள்ள நிலையில் உள்ள கடைக்குட்டி கண்ணனுக்கும் காதல் திருமணம் முடிந்துவிட்டது. இதுவரை குடும்ப சென்டிமெண்ட் உடன் போய்க்கொண்டிருந்த சீரியலில் அதிரடி மாற்றங்கள் ஆரம்பமாகியுள்ளது.
தற்போது கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடந்த காதல் திருமணம் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஹாட் டாபிக். இதனிடையே இந்த சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவணன் விக்ரம் ஷூட்டிங்கின் போது விபத்து ஒன்றில் சிக்கியுள்ளதாக அவரது தங்கை தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
சரவண விக்ரமின் தங்கை இதுகுறித்து தன்னுடை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்து வரும் திருமண காட்சி படப்பிடிப்பின் போது, என் சகோதரர் ஒரு சிறிய விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். அப்படி இருந்தாலும் உடல் முழுவதும் வலியை தாங்கிக்கொண்டு 4 மணி நேரத்திற்குள் மீண்டும் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார். இதனால் சரியாக நடக்க கூட முடியாத அளவிற்கு அவருடைய காலிலும் அடிபட்டுள்ளது. ஆனால் தன்னுடைய வலியைக் கூட தன் குழுவினரிடம் காட்டவில்லை. ஆனால் விபத்து நடந்தாலும் அவரது நடிப்பு அப்படியே இருந்தது. என் சகோதரரின் மன உறுதியை பார்த்த பிறகு நான் அவரை நினைத்து பெருமைப்பட்டேன். அப்படிப்பட்ட மாணிக்கம் அவர், உங்களுக்கு ஹேட்ஸ் ஆப் அண்ணா, தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் எல்லையற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.