பிடிக்கவில்லையென்றால் விலகிக்கொள்வது நல்லது!! அழகிரிக்கு பன்ச் வைத்த ராதாரவி!!!

By Maruthu Pandi SanthosamFirst Published Aug 25, 2018, 7:09 PM IST
Highlights

நாடு அழிந்துகொண்டிருக்கிறது. அழியாமல் இருக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும். திமுக இருக்க வேண்டுமென்றால் தளபதியார் இருக்க வேண்டும். 

கலைஞர் புகழுக்கு வணக்கம் செலுத்துவதற்காக திரைத்துறையை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து கோவையில் "மறக்கமுடியுமா கலைஞரை" நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் ராதாரவி புகழாரம் செலுத்தினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்ற நடிகர் ராதாரவி, வரப்போகும் தேர்தலில் தமிழகத்தின் முதல்வராக ஆக கூடிய, தலைவர் கலைஞர் கருணாநிதியின் ஆசிபெற்ற, அவரால் "செயல் தலைவர்" அடையாளம் காணப்பட்ட தளபதியார் ஸ்டாலின் என்று தான் தன்னுடைய உரையையே தொடங்கினார் ராதாரவி.

மேலும் அவர், கலைஞர் என்ற வார்த்தை ஒரு "கந்தக சொல்" நாம் எங்கு சென்றாலும் அந்த சொல்லை நோக்கி மீண்டும் வந்துவிடுவோம். வைகோவும் வந்துவிட்டார், அமித்ஷாவும் வருவார். என்று தன்னுடைய நக்கல் கலந்த பேச்சால் அரங்கத்தை அதிரவைத்தார் ராதாரவி.

தமிழகத்தின் ஒரே விலாசம் திமுக தான், காரணம் கலைஞர் கருணாநிதி தான். அவரை எதிர்த்த பலரும் கூட  அவருடைய உண்மையான பெயரை மறந்து 'கலைஞர், கலைஞர்' என்று தான் அழைத்தனர். அந்த பெயருக்கு பின் நானும் எதோ ஒரு விதத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறேன் என்று பெருமைப்படுகிறேன். என்று கூறிய ராதாரவி 1946 இல் 'தூக்குமேடை'  நாடக சமயத்தில் நடந்த ஒரு சில விஷயங்களை அரங்கத்தில் பகிர்ந்து கொண்டார். 

நடிகவேள் எம்.ஆர் ராதா பேரறிஞர் அண்ணாவுடன் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக தூக்கு மேடை நாடகத்தில் கருணாநிதியின் பெயரை பேரறிஞர் கருணாநிதி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதனை கருணாநிதி ஏற்க மறுத்து, "தமிழகத்தில் மட்டுமில்லை, இந்தியாவிலேயே ஒரே பேரறிஞர் தான், அதுவும் அண்ணா மட்டும் தான்" என்று கூறியுள்ளார். அதன் பிறகு தான் எம்.ஆர். ராதா கருணாநிதிக்கு கலைஞர் என்று பட்டம் சூட்டியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தினை அரங்கத்தில் பகிர்ந்துகொண்டார் ராதாரவி.

அவருடைய ஆசையை அவருடைய குடும்பம் தான் நிறைவேற்ற வேண்டும். நான் குடும்பம் என்று கூறியது அவருடைய ரத்த சொந்தங்களை மட்டும் இல்லை, நம் அனைவரையும் தான் கூறுகின்றேன். நாம் அனைவரும் இணைந்து தான் அவருடைய ஆசையை காப்பற்ற வேண்டும்.

நாடு அழிந்துகொண்டிருக்கிறது. அழியாமல் இருக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும். திமுக இருக்க வேண்டுமென்றால் தளபதியார் இருக்க வேண்டும். நான் சும்மா சொல்லல 50 வருஷ அனுபவம் அதான் சொல்றேன். இவ்வாறு பேசிய ராதாரவி இறுதியாக, அமைப்பு யாருக்கேனும் பிடிக்கவில்லயென்றால் விலகி கொள்வது நல்லது. நான் கூறுவது யாரையாவது  புண்படுத்தினால், நான் எப்பொழுதும் மன்னிப்பு கேக்கவே மாட்டேன். என்று அழகிரிக்கு பன்ச் வைத்து தனது உறையை முடித்தார்.

click me!