பெரிய தயாரிப்பாளர்களால் முடக்கப்பட்ட ஸ்பெஷல் டேஸ் ... ஒரே நேரத்தில் திரையில் வரிசை கட்டும் படங்கள்!!

By Kanmani PFirst Published Dec 9, 2021, 1:55 PM IST
Highlights

புத்தாண்டு பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் ஒரே நேரத்தில் பல சிறு பட்ஜெட் படங்கள் திரை காண வேண்டிய அவலம் உள்ளது.

இந்த மாத இறுதியில் மட்டும் குருதி ஆட்டம், செல்ஃபீ, 83, மேட்ரிக்ஸ், ரைட்டர், ராக்கி, என்ன சொல்ல போகிறாய் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்தடுத்து அதிக ஸ்பெஷல் டேஸ் இருக்கையில் இவ்வாறு பல படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கான காரணம், பெரிய படங்கள் முக்கிய நாட்களை அக்கிரமித்துள்ளதே என சொல்லப்படுகிறது.

அந்த வகையில் தொடர் விடுமுறை கிடைக்கும் அடுத்தாண்டு பொங்கலுக்கு அஜித்தின் வலிமை,தனுஷின் மாறன், விக்ரமின் துருவ நட்சத்திரம், ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர்,   பிரபாஸின் Radhe Shyam, உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படங்கள் அனைத்து திரையரங்குகளையும் ஆக்கிரமிக்க கூடும் என்பதாலும், இதனால் தங்களது வசூல் பெருமளவு பாதிக்க வாய்ப்பிருப்பதாலுமே சிறு பட்ஜெட் படங்கள் டிராஃபிக் இல்லாத நாட்களை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

பெரும்பாலும் சன்பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் உள்ளிட்ட பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் சிறு தயாரிப்பாளர்கள் பல வருடமாக மல்லு கட்டி தான் வருகின்றனர். இது தொடர்பாக பல புகார்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த திமுக ஆட்சியிலும் இது போன்ற பஞ்சாயத்தே எழுந்தது. அப்போது இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு கண்டு வெளியீட்டு தேதியை முறைப்படுத்தினர். அதன்படி பெரிய பட்ஜெட் படங்கள் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டது.   

ஆனால் தற்போது அந்த விதிமுறை காற்றில் சென்று விட்டதாகவே தெரிகிறது. இந்த கருத்துக்களை பாரதிராஜா, சசிகுமார், சமுத்திர கனி என பலரும் வலியுறுத்தி விட்டனர். இருந்தும் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.

பட தயாரிப்பாளர்கள் பலர் நொடிவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சரியான வெளியீட்டு தேதி கிடைக்காததே என சொல்லப்படுகிறது. பட தயாரிப்புக்காக பல மடங்கு வட்டிக்கு வாங்கப்படும் பணத்தை பட வசூல் மூலமே திருப்பி செலுத்தும் நிலை உள்ளது. இந்த சூழலில் படம் சரியான நாட்களில் வெளியாகாத காரணத்தால் பல தயரிப்பாளகர் கடனில் மூழ்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு வட்டி கொடுமையில் வாழ்க்கையை தொலைத்த தயரிப்பாளர்கள் கதை பல உண்டு கோடம்பாக்கத்தில். இந்த நிலையை மற்றி சிறு தயாரிப்பாளர்கள் மீது கரிசனை காட்ட வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

click me!