RRRTrailer : எப்படி இருக்கிறது RRR படத்தின் டிரெய்லர் ..பாகுபலிக்கு இணையான அதிரடி காட்டும் ராஜமௌலி!!

By Kanmani P  |  First Published Dec 9, 2021, 12:47 PM IST

RRR Trailer Release : பிரமிக்க வைக்கும்  காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் உடனடியாக நம்மை RRR உலகிற்கு அழைத்துச் செல்கிறது.


பாகுபலி இயக்குனர் SS ராஜமௌலியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RRR இன் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  பிரமிக்க வைக்கும்  காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் உடனடியாக நம்மை RRR உலகிற்கு அழைத்துச் செல்கிறது. 3 நிமிட ரோலர் கோஸ்டர் சவாரி போல  ட்ரெய்லர் செம த்ரில்லராக உள்ளது.  பல அதிரடி மற்றும் பிரம்மாண்டம் நிறைந்த இந்த ட்ரெய்லரில் ராம் சரண் கவர்ச்சியான மற்றும் ஆஜானபாகுவான தனது உடல் வடிவு கொண்டு ரசிகர்களை கட்டி இழுக்கிறார்.

மறுபுறம், ஜூனியர் என்டிஆர் அற்புதமான வடிவத்தில் இருக்கிறார். இருவரின் அதிரடி நடிப்பு RRR இன் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்.  ராஜமௌலியின் மீண்டும் ஒருமுறை உலகளாவிய பாக்ஸ் ஆபிஸை புயலாக தாக்க தயாராகிவிட்டார் என்று தெரிகிறது.

Tap to resize

Latest Videos

undefined

பாகுபலியைப் போலவே,ஆர் ஆர் ஆரிலும்  பிரமாண்டமான ஸ்டண்ட்கள் விருந்தாக்கப்பட்டுள்ளது.  இந்த டிரெய்லரின் மூலம், படத்தில் உள்ள மற்ற நடிகர்கள் - அஜய் தேவ்கன், ஷ்ரியா சரண், ஆலியா பட், சமுத்திரக்கனி, அலிசன் டூடி, ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சியமைப்பில் மூலம் RRRன் மாபெரும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. 

RRR இன் தமிழ் டப்பிங் பதிப்பு லைகா புரொடக்ஷன்ஸ் பேனர் மூலம் வெளியிடப்படும். பாகுபலி 1 & 2 மூலம் தமிழகத்தில் தனக்கென ஒரு திடமான மார்க்கெட்டை உருவாக்கிக்கொண்ட ராஜமௌலி, RRR படத்திலும் தனது பழைய வெற்றியை ஈட்டுவார் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். 
 

click me!