லட்சக்கணக்கில் பண மோசடி! நடிகர் மகேஷ் பாபு மீது வழக்கு பதிவு செய்ய முடிவு!

By manimegalai aFirst Published Feb 22, 2019, 1:30 PM IST
Highlights

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு ஐதராபாத்தில் உள்ள கச்சி பவுலி என்ற இடத்தில் சமீபத்தில் 7 தியேட்டர்களை கட்டி திறந்தார். 1600 பேர் அமரும் இருக்கைகள் 3டி, டால்பி, அட் மாஸ்பியர்  ஒலி அமைப்பு என்று சர்வதேச தரத்தில் தியேட்டர்களை உருவாக்கி இருந்தார்.
 
இங்கு கோல்டு டிக்கெட் கட்டணம் 200 ரூபாயாகவும், பிளாட்டினம் டிக்கெட் கட்டணம் 300 ரூபாயாகும் நிர்ணயிக்கப்பட்டது. இங்கு ஹாலிவுட், தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் திரையிடப்படுகின்றன. 

ஐதராபாத்தில் புதிய அடையாளமாக இந்த தியேட்டர்கள் இருப்பதாக தெலுங்கு திரையுலக பிரமுகர்கள் பாராட்டி வந்தனர்.

தற்போது இந்த தியேட்டர் சர்ச்சையில் சிக்கி உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் சினிமா டிக்கெட்டுக்கான ஜி.எஸ்.டி.வரியை குறைத்து. இதனால் நாடு முழுவதும் உள்ள திரையுயரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறைந்தன. ஆனால் மகேஷ் பாபுவுக்கு சொந்தமான இந்த 7 தியேட்டர்களிலும் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படவில்லை. 

இதன் மூலம் ஒரு மாதத்தில் ரூ.35  லட்சம் அதிகம் சம்பாதித்ததாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தியேட்டரில் சோதனை நடத்தினர்.பின்னர் ஜி.எஸ்.டி.வரி நடைமுறைகளை மீறியதாக விளக்கம் கேட்டு மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

click me!