
தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள இந்த படத்துக்கு அபார பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. நிலம், சாதி, வர்க்க படிநிலைகளை இந்த சமூகத்துக்கு எடுத்து காட்டுவது போல இந்த படம் இருப்பதுதான் இதன் சிறப்பு.
இந்நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே தூத்துக்குடியில் ஸ்பெஷல் காட்சியாக மு.க.ஸ்டாலினுக்கு திரையிடப்பட்டது. அவர் மாவட்டச் செயலாளர்களுடன் படத்தை பார்வையிட்டார். இந்நிலையில், இந்தப்படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ள மு.க.ஸ்டாலின், ‘’அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்’’எனப் பதிவிட்டுள்ளார்.
அதற்கு, ‘’காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம்’’ என தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் பதிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.