
தனது அடுத்த பட டைட்டிலும் ‘V'யில் தான் துவங்கவேண்டும் என்று அல்டிமேட் அஜீத் அடம்பிடித்ததால், உதவி இயக்குநர்களால் நூற்றுக்கணக்கில் எழுதிக் குவிக்கப்பட்ட ’வி’டைட்டில்கள் ஒப்படைக்கப்பட அதில் ‘வலிமை’ என்ற டைட்டிலுக்கு ஓ.கே.சொல்லியிருக்கிறாராம் அவர்.
போனி கபூர் தயாரிப்பில்,ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் ரேஸ் மன்னன் மற்றும் காவல்துறை அதிகாரியாகக் களம் இறங்கும் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. வழக்கமாக படப்பிடிப்பு துவங்கி ஆடியோ ரிலீஸ் சமயத்தில்தான் தலைப்புக்காக தவிப்பார்கள். ஆனால் இம்முறை படப்பிடிப்பு துவங்குமுன்பே டைட்டிலை அறிவித்துவிட அஜீத் ஆசைப்பட்டிருக்கிறார். அத்தோடு தனது சமீபகால செண்டிமெண்டுகளின் தொடர்ச்சியாக இப்படத்தின் தலைப்பு ஆங்கில எழுத்து ‘V'யில் துவங்கினால் மகிழ்வேனென்று இயக்குநருக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
அதையொட்டி தனது உதவி இயக்குநர்களை பேப்பரும் பேனாவுமாக அமர வைத்த வினோத் அவர்கள் மூலம் பெற்ற நூற்றுக்கணக்கான ‘வி’க்களை அஜீத் முன்னால் கொட்ட அவர் ஓ.கே.பண்ணிய டைட்டில்தான் வலிமை என்கிறது விபரமறிந்த வட்டாரம். அந்த தலைப்பை ஏற்கனவே ஒரு தயாரிப்பாளர் பதிவு செய்து வைத்திருக்க, அஜீத் ஆசைப்படுகிறார் என்றவுடன் அவர் ஒரு நொடி கூட யோசிக்காமல் மாற்றிக்கொடுத்தது தனிக்கதை.
இச்செய்தியை வைத்தே தல ரசிகர்கள் அடுத்த ஒரு வாரத்துக்கு தலைகீழாக ஆடுவார்கள் என்னும் நிலையில் ‘வலிமை’படத்துக்கு ஹீரோயினும் முடிவாகிவிட்டதாகவும் தயாரிப்பாளர் போனிகபூரின் நெருங்கிய தோழியான கீர்த்தி சுரேஷ்தான் தலயின் அடுத்த ஜோடி என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.