
திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆன்சி கபீர், 26 வயதாகும் இவர் கடந்த 2019ஆம் ஆண்டு கேரளாவில் நடத்த அழகிப் போட்டியில் பங்கேற்று முதல் இடத்தைப் பிடித்து பட்டத்தை வென்றார். இவருடன் இதே அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் அஞ்சனா சாஜன் (24) வயதாகும் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இந்த அழகிப் போட்டிகள் மூலம் ஆன்சி கபீர் மற்றும் அஞ்சனா சாஜன் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினார். அவ்வப்போது இருவரும் சேர்ந்து மாடலிங் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது உண்டு. அந்த வகையில், ஆன்சி, அஞ்சனா உட்பட 4 பேர் திருவனந்தபுரத்தில் நடந்த மாடலிங் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கடந்த நவம்பர் 1 ஆம் தேதி, நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதிகாலை ஒரு மணியளவில் இவர்கள் எர்ணாகுளம் புறவழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஏற்பட்ட விபத்தில் மாடல் அழகிகள் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் செய்திகள்: Sneha Police Compliant: என்னை ஏமாத்திட்டாங்க... காவல் நிலையத்தில் நடிகை சினேகா பரபரப்பு புகார்!!
மேலும் இந்த விபத்து குறித்து எர்ணாகுளம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இவர்களை கொலை செய்ய யாரேனும் முயன்றார்களா? என்கிற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுகுறித்து ஓட்டல் அதிபர் ஒருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. ராய் வயலாட் எனும் ஓட்டலின் உரிமையாளர் ஒருவரை சிசிடிவி பதிவுகளை அழித்த குற்றத்திற்காகவும் அவருடன் சேர்த்து 5 ஓட்டல் ஊழியர்களையும் போலீசார் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக காரின் டிரைவர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்ட நிலையில். திடீர் திருப்பமாக 2 மாடல் அழகிகளுடம் விபத்து என்கிற பெயரில் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: Maanaadu Movie Pre Release: 'மாநாடு' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி... மேடையில் கண் கலங்கி அழுத சிம்பு!
தற்போது ஓட்டல் அதிபர் உட்பட 6 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: 'இந்தியன் 2' படத்தில் இனி காஜலுக்கு பதில் இவரா? 6 வருடங்களுக்கு பின் மீண்டும் கமலுடன் இணையும் முன்னணி நடிகை!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.