தனுஷ் குரலில் "மேகம் கருக்காதா "..திருச்சிற்றம்பலம் லிரிக் வீடியோ இதோ!

Published : Jul 15, 2022, 08:07 PM IST
தனுஷ் குரலில் "மேகம் கருக்காதா "..திருச்சிற்றம்பலம் லிரிக் வீடியோ இதோ!

சுருக்கம்

ஏற்கனவே தாய் கிழவி பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு வரிகளை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது மேகம் கருக்குதா என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் தனுஷ் எழுதி பாடியுள்ளார்.

மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தை தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ளார். இசை நகைச்சுவை நாடகம் எனக் கூறப்படும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். தனுஷ் டைட்டில் ரோலிலும் ராசி கண்ணா, நித்யாமேனன், ப்ரியா பவானி சங்கர் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நீண்ட காலம் கழித்து அனிருத்தும் தனுசும் இணைவது குறித்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..உச்சகட்ட கவர்ச்சியில் குதித்த தர்ஷா குப்தா...அரைகுறை உடையில் கவரும் சீரியல் நடிகை!

வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளி யாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோக உரிமையை பெற்றுள்ளது. ஏற்கனவே அனிருத் தனுஷ் கடைசியாக தங்கமகன் படத்தில் இணைந்திருந்ததை அடுத்து தற்போது திருச்சிற்றம்பலத்தில் பாடல்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த படத்திலிருந்து ஏற்கனவே தாய் கிழவி பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு வரிகளை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது மேகம் கருக்குதா என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் தனுஷ் எழுதி பாடியுள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு..முதல் படத்திலேயே 7 கதாநாயகிகள்..! ஹீரோவாக கலக்க வரும் பிக்பாஸ் நிரூப்..!

இந்த படத்தோட சேர்த்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், டோலிவுட்டில் வாத்தி , ஹாலிவுட் தி கிரே மேன் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகி உள்ளார் தனுஷ். இதில் கிரே மேன்  ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

மேலும் செய்திகளுக்கு..இந்திரா காந்தியான கங்கனா ரனாவத்.. ட்ரைலரை பார்த்து தமன்னா என்ன சொன்னார் தெரியுமா?

சமீபத்தில் நடைபெற்றது இந்த  படத்தில் பிரீமியார் ஷோவில்  தனுஷ் தன் மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டால் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.  தனுஷ் கருப்பு உடையில் அழகாகவும் கேமராக்களுக்கு போஸ் கொடுத்தனர். இந்த படத்தை  இயக்குனர் ஜோடியான ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோவுடன் இயக்கியுள்ளனர்.. . ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகும் இப்படத்தில் தனுஷ் அவிக் சானாக நடித்துள்ளார் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?