விஜய், சூர்யா மனைவிகளை அசிங்கமாக விமர்சித்த மீரா மிதுன்... இனி “அந்த” வார்த்தை சொல்லி கூப்பிடவா? என சவால்...!

By manimegalai aFirst Published Aug 5, 2020, 4:32 PM IST
Highlights

தன்னை மோசமாக திட்டி தீர்க்கும் விஜய் - சூர்யா ரசிகர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும் விதமாக, விஜய்யின் மனைவி சங்கீதா பற்றியும், சூர்யாவின் மனைவி ஜோதிகா பற்றியும் அவதூறாக பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். இனி என்னையும் இப்படி மோசமாக பேசுவார்களா என ரசிகர்களுக்கு சவால் ஒன்றையும் விடுத்துள்ளார்.

நடிகர் சூர்யா, விஜய் என முன்னணி பிரபலங்களை டார்கெட் செய்து வம்பிழுத்து வரும் மீரா மிதுன், தொடர்ந்து  கண்டமேனிக்கு முன்னணி நடிகர்கள் பற்றி விமர்சித்து பேசிவருவதால், கடுப்பான விஜய் - சூர்யா ரசிகர்கள், மீரா மிதுனை வாய்க்கு வந்தபடி வசைபாடினர். சிலர் பைத்தியம், லூசு என இவரை கழுவி ஊற்றிவந்தாலும், சிலர் காதுகொடுத்து கேட்கமுடியாது வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர்.

மேலும் செய்திகள்: ஜோதிகா என்ன சுத்தமா? சூர்யாவை கல்யாணம் செஞ்ச அப்புறம் தான் இப்படி... வாயை விட்டு வாங்கி கட்டும் மீரா மிதுன்!
 

இப்படி தொடர்ந்து தன்னை மோசமாக திட்டி தீர்க்கும் விஜய் - சூர்யா ரசிகர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும் விதமாக, விஜய்யின் மனைவி சங்கீதா பற்றியும், சூர்யாவின் மனைவி ஜோதிகா பற்றியும் அவதூறாக பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். இனி என்னையும் இப்படி மோசமாக பேசுவார்களா என ரசிகர்களுக்கு சவால் ஒன்றையும் விடுத்துள்ளார்.

ஏற்கனவே, பாலிவுட் திரையுலகில் மட்டும் அல்ல, கோலிவுட் திரையுலகிலும், வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் மற்றும் ஜாதி பார்ப்பது வாய்ப்புகள் கொடுப்பது போன்றவை உள்ளது என, நடிகை த்ரிஷா மற்றும் கமல்ஹாசனை சாடி பேசியிருந்தார் மீரா.

மேலும் செய்திகள்: நடிகர் மாதவன் வீட்டில் இப்படியெல்லாம் செய்து வைத்திருக்கிறாரா..! பிரமாண்ட வீட்டை பார்க்கலாம் வாங்க!

 
பின்னர் நடிகர் சூர்யா பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன், அவருக்கு நடிக்கவே தெரியாது என்றும், ஒரு சாதாரணக் காட்சிக்கு கூட 20 டேக்குகள் வாங்குவார் என்றும், ஆக்டிங் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த கோபமடைந்தனர். 

இதைத்தொடர்ந்து சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை தொடர்ந்து போன் மற்றும் வாட்ஸ் அப்பில் மிரட்டுவதாகவும், கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் உங்க மனைவி, குழந்தைகளுக்கு இப்படி நடந்தால் ஏற்பீர்களா... என் நெம்பர் பல குரூப்களுக்கு பகிரப்படுகிறது. எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யா தான் பொறுப்பு என்று ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.

மேலும் செய்திகள்: வாவ்... அசரவைக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீடு..! வாங்க பார்க்கலாம்..!
 

மேலும் நேற்றைய தினம் ஜோதிகா திருமணத்திற்கு பின் பரிசுத்தமான பசுவாக மாறிவிட்டார் என்றும், அதற்க்கு முன் எப்படி இருந்தார் அவருடைய கருப்பு பக்கங்கள் பற்றி கோலிவுட் திரையுலகை சேர்ந்த அனைவருக்குமே தெரியும் என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இன்று இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சர்ச்சைக்கு விதமாக பேசி, சவால் விட்டிருந்தாலும், நெட்டிசன்கள் கமெண்டில் நாறடித்துவிடுவார்கள் என்பதை அறிந்து கமெண்ட்டை ஆப் செய்து விட்டார் மீரா மிதுன்..

அந்த வீடியோ இதோ...
 

Shameless uncivilized fans 😡🤬 pic.twitter.com/iQAHbxVv3W

— Meera Mitun (@meera_mitun)

click me!