
கொரோனா வைரஸ் ஊரடங்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை குவித்து வைத்திருக்கும் பெரிய மாஸ் ஹீரோக்கள் கூட பெயருக்கு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டு அமைதியாகி விட்டனர். ஆனால் திரையில் வில்லனாக தோன்றும் நடிகர் சோனு சூட், ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்து ரியல்ஹீரோவாக வலம் வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்த ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்ல, பஸ், பிளைட் போன்றவற்றை ஏற்பாடு கொடுத்தார். அதே போல் உணவின்றி கஷ்டப்பட்டு வந்த பலருக்கு சாப்பாடு கொடுத்தும் உதவினார்.
இதையும் படிங்க: டாப்லெஸில் தாறுமாறாக போஸ் கொடுத்த ஹன்சிகா... குஷியான ரசிகர்களுக்கு விழுந்த குட்டு...!
அதுமட்டுமின்றி சோசியல் மீடியா மூலமாகவும் உதவி தேவைப்படுவோருக்கு தன்னால் ஆன பல விஷயங்களை செய்து கொடுக்கிறார். விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு காளை மாடுகளை வாடகைக்கு எடுக்க கூட பணம் இல்லாமல் இரண்டு மகள்களை ஏரில் பூட்டி உழுத நிலையில் அடுத்த நாளே அவருக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தார். சாப்ட்வேர் இன்ஜினியர் பணியை இழந்து காய்கறி வியாபாரம் செய்த இளம்பெண்ணுக்கு அடுத்த நாளே சாப்ட்வேர் இன்ஜினியர் பணி வாங்கி கொடுத்தார்.
சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சோனு சூட், கொரோனா தாக்கத்தால்... வேலை இழந்து கஷ்டப்படும் சுமார் 3 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தரும் முயற்சியில் இறங்கியுள்ளார். இப்படி அடுத்தடுத்து உதவிகளால் திணறடித்து வந்த ரியல் ஹீரோ சோனு சூட் மற்றொரு மாபெரும் காரியத்தை செய்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று... தனியார் மருத்துவமனையில் அனுமதி...!
அதாவது ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த தமிழக மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர், கொரோனா லாக்டவுனால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்த தகவலைக் கேள்விப்பட்ட சோனு சூட் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிற்கு தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து அனுப்பி மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்துள்ளார். நேற்று பிற்பகல் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட மாணவர்கள் இரவே சென்னை வந்தடைந்தனர். தனி விமானம் மூலம் பத்திரமாக நாடு திரும்பிய மாணவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் நடிகர் சோனு சூட்டிற்கு மனதார நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.