மீரா மிதுனிடம் இருந்து தப்பி ஓடிய ஆசை காதலன்... ஆதங்கத்தில் கத்திய ஆடியோ..! கடுப்பில் லீக் செய்த மேனேஜர்!

Published : Aug 17, 2020, 01:16 PM ISTUpdated : Aug 17, 2020, 01:20 PM IST
மீரா மிதுனிடம் இருந்து தப்பி ஓடிய ஆசை காதலன்... ஆதங்கத்தில் கத்திய ஆடியோ..!  கடுப்பில் லீக் செய்த மேனேஜர்!

சுருக்கம்

இதுவரை ஒரு படத்தில் கூட ஹீரோயினாக நடிக்காத சூப்பர் மாடல் மீரா மிதுன், இவருக்கு வரிசை கட்டி வந்த வாய்ப்புகள்,  நேபோட்டிசம் காரணமாக பறி போய் விட்டதாகவும், அதற்க்கு விஜய், சூர்யா ஆகியோர் தான் காரணம் என்பது போல் சீன் போட்டு வரும் நிலையில் இவருடைய காதல் ஆதங்க ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன் மேனேஜர் வெங்கட்.  

இதுவரை ஒரு படத்தில் கூட ஹீரோயினாக நடிக்காத சூப்பர் மாடல் மீரா மிதுன், இவருக்கு வரிசை கட்டி வந்த வாய்ப்புகள்,  நேபோட்டிசம் காரணமாக பறி போய் விட்டதாகவும், அதற்க்கு விஜய், சூர்யா ஆகியோர் தான் காரணம் என்பது போல் சீன் போட்டு வரும் நிலையில் இவருடைய காதல் ஆதங்க ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன் மேனேஜர் வெங்கட்.

வனிதா பிரச்சனை ஓய்ந்த பின், மீரா மிதுன் பிரச்சனை தான் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம ஹாட் டாப்பிக். எப்படியாவது பிரபலமானால் சரி என, தன்னை கழுவி கழுவி ஊற்றினாலும் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விஷயங்களை தேடி தேடி பேசி வருகிறார் மீரா.

மேலும் செய்திகள்: நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க பார்க்கலாம்..!
 

அந்த வகையில், தன்னுடைய திரைப்பயணத்தில் முட்டு கட்டையாக உள்ளது, வாரிசு நடிகர்கள் தான் என்றும்... நடிகர் சூர்யா மற்றும் விஜய்யை தாறுமாறாக பேசினார். மேலும் நடிகர் சூர்யாவிற்கு சுத்தமாக நடிக்க தெரியாது என்றும், ஆக்ட்டிங் என்பதற்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது. ஒரு ஷாட்டுக்கு 20 டேக் எடுப்பது என கூறினார். அதே போல் விஜய் பற்றியும் விமர்சித்தார்.

மேலும் செய்திகள்: நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது இவரா? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்!
 

இதனால் கடுப்பான இவர்களுடைய ரசிகர்கள், மீராவை சமூக வலைத்தளத்தில் வச்சி செய்தனர். இயக்குனர் பாரதி ராஜா, நடிகை ஆர்த்தி, சனம் ஷெட்டி ஆகியோர் இவரை கடுமையாக கண்டித்தனர். மேலும் மீரா மிதுன் செய்யும் அட்ராசிட்டி குறித்து அவ்வப்போது பல தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள் ஜோ மைக்கேல், மற்றும் வெங்கட்.

அந்த வகையில் வெங்கட் தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன், அவரிடம் இருந்து தப்பித்து ஓடிய ஆசை காதலர் பற்றி மேனேஜர் வெங்கட்டிடம் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மீரா தன்னுடைய காதலருக்காக உருகி பேசுகிறார். அவர் தன்னை பார்க்க வராவில்லை தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார். 

மேலும் செய்திகள்: நட்சத்திர ஜோடி சினேகா - பிரசன்னாவின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..! வாங்க பார்த்துட்டு வரலாம்..!
 

வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ...  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வசூலில் தனுஷ் படத்தை தட்டிதூக்கிய நயன்தாராவின் ‘பேட்ரியாட்’ - முதல் நாளே இத்தனை கோடியா?
Kara Movie Day 2 Box Office: கலெக்‌ஷன் கிங் ஆக மாறிய ‘கர’சாமி... முதல் நாளைவிட அதிக வசூல் அள்ளி சாதனை