Arjun அர்ஜுன் மீது பாலியல் புகார் அளித்த நடிகை ; விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்

Published : Dec 01, 2021, 07:11 AM IST
Arjun அர்ஜுன் மீது பாலியல் புகார் அளித்த நடிகை ; விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்

சுருக்கம்

Arjun கடந்த 2018 -ம் ஆண்டு நடிகை ஒருவர் அர்ஜுன் மீது அளித்த "ME TOO" புகார் குறித்த விசாரணை அறிக்கையை விரைவில் காவல்துறை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.  

தமிழ் தெலுங்கு என பன்மொழிகளில் பிரபலமான நடிகர் அர்ஜுன். இன்றளவும் சினிமா தேசப்பாடல்கள் என்றாலே அர்ஜுன் தான் நினைவிற்கு வருவார். இவர் நடிப்பில் வெளியான ஜெண்டில்மேன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் பிளாக்புஸ்டர் அடித்த படங்களுக்கும். இவர் தற்போது தமிழை காட்டிலும் தெலுங்கு படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். மோகன்லால் நடிப்பில் வெளியாகும் மரைக்காயர் படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும், நல்ல இமேஜ் கொண்ட நடிகராகவும் வலம் வரும் அர்ஜுன் மீது நடிகை ஒருவர் கொடுத்துள்ள பாலியல் புகார் சினிமா வட்டாரத்தில் மிகுந்த சர்ச்சையை  ஏற்படுத்தி வருகிறது.

அர்ஜுன் நடிப்பில் கன்னடத்தில் வெளியான விஸ்மயா இந்த படம் தமிழில் நிபுணன் என்கிற பெயரில் வெளியானது. இதில் அர்ஜூனுடன் இணைந்து நடித்த நடிகைதான் " "புகார் கொடுத்துள்ளார்.

தமிழில் நெருங்கி வா முத்தமிட்டுவிடாதே உள்ளிட்ட படங்களில் நடித்த கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இவர் கடந்த 2018 -ம் ஆண்டு விஸ்மயா  படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இரண்டு வருடங்களாக நடைபெற்ற போலீஸ் விசாரணையில் அர்ஜுன் மீது எவ்வித தவறும் இல்லை என்னும் முடிவிற்கு காவல்துறை வந்துள்ளதாம். இதை தொடர்ந்து விரைவில் அர்ஜுனுக்கு சாதகமான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!
பாசத்தை உலுக்கிய துயரங்கள்; பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த சோக சம்பவங்கள்!