கலைஞர் குரலில் பேச தெரியும்..! ஆனால் முடியவில்லை...! ஆதங்கத்தோடு கூறிய மயில் சாமி...!

By manimegalai aFirst Published Aug 25, 2018, 6:39 PM IST
Highlights

மறைந்த முன்னால் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு திரையுலகை சேர்ந்த அனைவரும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தும் விழா இன்று கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திரையுலகை சேர்ந்த நடிகர் ராதரவி, மயில் சாமி, ராதிகா, சிவகுமார், பாரதிராஜா, பிரபு, ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னால் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு திரையுலகை சேர்ந்த அனைவரும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தும் விழா இன்று கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திரையுலகை சேர்ந்த நடிகர் ராதரவி, மயில் சாமி, ராதிகா, சிவகுமார், பாரதிராஜா, பிரபு, ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், மற்றும் பல திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியயை சிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மயில் சாமி, கலைஞர் குறித்து பேசினார். மேடைக்கு வந்த அவர்... எடுத்த உடனே என்ன பேசுவது என்றே தெரியவில்லை என கூறி, கலைஞர் இவருடைய நிகழ்ச்சியை பார்த்து பாராட்டிய தருணம் குறித்து பேசினார்.

மயில்சாமி, சன் தொலைக்காட்சியில் 'காமெடி டைம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது , ஒரு முறை தன்னை கலைஞர் சந்தித்ததாகவும். அப்போது தன்னை அழைத்து... "என்ன பா.. நீ எந்த ஊரு என கேட்டாராம் கலைஞர்'. இதற்க்கு மயில் சாமி தன்னுடைய ஊர் கோயம்புத்தூர் என கூறியதும்... நல்ல நிகழ்சியை பண்ணுற.. தினமும் உன் நிகழ்ச்சியை பார்த்து சிரித்து விட்டுதான் தூங்குவதாக தெரிவித்தாராம். இந்த தருணத்தை மேடையில் கூறி மெய் சிலிர்த்த மயில் சாமி இதை விட தனக்கு வேற என்ன வேண்டும் என பூரித்தார்.

தொடர்ந்து பேசிய இவர், மிமிக்கிரி செய்து வாழ்க்கையை துவங்கிய போது.. எம்.ஜி.ஆர், சிவாஜி என பலருடைய குரலையும் நன்றாக பேசுவேன்... ஆனால் கலைஞர் குரலில் பேசு என நண்பர்கள் பலர் தன்னிடம் கூறியதாகவும். அதற்காக ஒரு முறை கலைஞர் ஐயா கலந்து கொண்ட நிகழ்ச்சியை பார்க்க நேரில் சென்றேன். அவர் பேசியதை கேட்டேன்... அவர் பேச துவங்கியதுமே கை தட்டல்கள் பறந்தது என அவருடைய குரலில் பேசினார்.

கலைஞர் போல் பேச கற்றுக்கொண்டேன் ஆனால், இது வரை ஒரு நிகழ்ச்சியில் கூட அவருடைய குரலால் என்னால் பேச முடிய வில்லை என கூறினார். இதற்கு முக்கிய காரணம்... தனக்கு படிக்க தெரியாது. அவரின் தமிழ் உச்சரிப்பு ஒவ்வொன்றும் கல்கண்டு போல் இருக்கும். நான் அவருடைய குரலில் வேண்டுமானால் பேசலாம் ஆனால் அவருடைய தமிழில் பேச தெரியாது அதனால் தன்னால் அவருடைய குரலை பேச முடியவில்லை என மிகவும் வருத்தமாக கூறினார். 

மேலும் கலைஞர் அவர்களுக்காக கண்ணீர் சிந்தியவர்களில், நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்வதாக கூறி தன்னுடைய உரையை நன்றி தெரிவித்து முடித்தார் மயில் சாமி.

click me!