
இசைஞானி இளையராஜா, தான் இசையமைத்த படங்களை இனி பாடகர், எஸ்.பி.பி மற்றும் சித்ரா படக்கூடாது என்றும் அப்படி படுவதாக இருந்தால் தன்னிடம் அனுமதி கேட்டு தான் பாடவேண்டும் என்று கூறினார்.
மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பிய செய்தி ஓட்டு மொத்த திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் மதன்கார்க்கி இளையராஜாவின் நோட்டீஸ் நடவடிக்கை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
பாடல்களின் ராயல்டி இசை அமைப்பாளருக்கு மட்டும் சொந்தமில்லை என்றும் . அந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கும் சொந்தம்.
இளையராஜா சொல்வது சரிதான் என்றாலும் கூட, அவரே வெளியில் பாடல்களை பாடினால் பாடலாசிரியரிடமும், தயாரிப்பாளரிடமும் அனுமதி பெற்று தான் பாட வேண்டும்.
மேலும் எஸ்பிபி மற்றும் சித்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலாக ஒரு ஃபோன் கால் செய்து நட்பு முறையில் இந்த விஷயத்தை அணுகியிருக்கலாம் என்றும் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.