25 வருடத்திற்கு பின் மீண்டும் இணையும் ரஜினி - குஷ்பு....

Asianet News Tamil  
Published : Mar 20, 2017, 01:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
25 வருடத்திற்கு பின் மீண்டும் இணையும் ரஜினி - குஷ்பு....

சுருக்கம்

kushboo and rajini again join the ranjith movie

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வைரலாக பரவிக்கொண்டு வருகிறது.
 
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள பா.ரஞ்சித், வரும் ஏப்ரல் 14 தேதி இந்த படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிப்பார் என்று சமீபத்தில் ஒருசில இணையதளங்களில் செய்திகள் வெளிவந்து பின்னர் அது இயக்குனரால் மறுக்கப்பட்டது.
 
தற்போது இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையென்றால் கடந்த 1992ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 1992ஆம் ஆண்டு ரஜினி-குஷ்பு நடித்த 'மன்னன்', 'அண்ணாமலை' மற்றும் 'பாண்டியன்' ஆகிய மூன்று படங்கள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில்  ரஜினி மற்றும் குஷ்பு  இணைவது உறுதிப்படுத்தபட்டால் 25 வருடம் கழித்து இந்த படம் மூலம்  இருவரும் இணைவார்கள்... மீண்டும் இந்த வெற்றி ஜோடியை விரைவில் ரசிகர்கள் திரையில் பார்க்கலாம்...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

40 வயதில் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த முன்னணி நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: ரூ.250 கோடி கேட்ட சங்கீதாவிற்கு ரூ.35 கோடி செட்டில்மென்ட்டா? வெளியான முக்கிய தகவல்!