
நடிகர் கமலஹாசனின் சகோதரரும் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகியாகவும் இருந்த சந்திரஹாசன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்தார்.
இதனால் லண்டனில் உள்ள அவரது மகள் அனுஹாசன் வீட்டில் தங்கி சந்திரஹாசன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீர் என அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, மேலும் தற்போது இது குறித்து கமலஹாசன் தனது சகோதரரை நினைத்து ஒரு ட்விட் செய்துள்ளார்... அதில் கூறியிருப்பதாவது,
நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை.... என உருக்கமாக தன்னுடைய வேதனையை கூறியுள்ளார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.