'மாஸ்டர்' பட தயாரிப்பாளரின் அடுத்த படம்... ஹீரோவாகும் நடிகரின் வாரிசு!

Published : Apr 14, 2021, 07:02 PM IST
'மாஸ்டர்' பட தயாரிப்பாளரின் அடுத்த படம்... ஹீரோவாகும் நடிகரின் வாரிசு!

சுருக்கம்

'மாஸ்டர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ள படத்தின், ஹீரோ மற்றும் இயக்குனர் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.  

'மாஸ்டர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ள படத்தின், ஹீரோ மற்றும் இயக்குனர் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

'மாநகரம்',  'கைதி',  ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்த, XBFilmCreators தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தன்னுடைய அடுத்த படம் குறித்தும், இயக்குனர் மற்றும் ஹீரோ குறித்த தகவலை அதிகாரபூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் தயாரிப்பில் வெளியான, 'மாஸ்டர்' திரைப்படம் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதியோடு வெளியானாலும், படம் வெளியான இரண்டே நாட்களில் 200 கோடி வசூலித்து சாதனை படைத்தது. மேலும் சுமார் 50 நாட்களுக்கு மேல் ஓடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது வரை உலக அளவில் இந்த படத்தின் பாடல்களுக்கு  ரசிகர்கள் இருந்து வருகின்றனர். 2020 ஆம்  ஆண்டே வெளியாக வேண்டிய இந்த திரைப்படம், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு, ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியானது. 

இதை தொடர்ந்து தற்போது சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தயாரிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு குறித்த, அறிக்கையை வெளியிட்டுள்ளார். "அதில் தெரிவித்திருப்பதாவது, 'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து XBFilmCreators  தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.  பன்முக திறமை வாய்ந்த, இயக்குனர் விஷ்ணுவர்தனுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நடிகர் முரளியின் மகனும், அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் எங்கள் நலம் விரும்பிகளுக்கும் எங்களது XBFilmCreators தயாரிப்பு நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் முரளி, மறைந்த நடிகர் முரளியின் மகனும், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மருமகனும் ஆவார். சமீபத்தில்தான் சேவியர் பிரிட்டோ வின் மகள் ஸ்னேஹாவிற்கு ஆகாஷ் முரளிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து தற்போது தன்னுடைய மருமகன் கதாநாயகனாக நடிக்க வைத்து திரைப்படத்தை இவர் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ