தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசு..!

Published : Apr 14, 2021, 12:05 PM ISTUpdated : Apr 14, 2021, 12:26 PM IST
தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசு..!

சுருக்கம்

தடகள போட்டியில் சாதனை செய்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை தனலட்சுமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, பரிசு ஒன்றையும் கொடுத்ததாக தனலட்சுமி தெரிவித்துள்ளார்.  

தடகள போட்டியில் சாதனை செய்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை தனலட்சுமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, பரிசு ஒன்றையும் கொடுத்ததாக தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி என்ற கல்லூரி மாணவி, 100 மீட்டர் தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியாவின் மிகச்சிறந்த ஓட்ட வீராங்கனையான ஹிமாதாஸின் சாதனையை இவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த சாதனையால் தமிழகத்திற்கே பெருமை சேர்த்த,  தனலட்சுமியை தொடர்பு கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாகவும் இதனை அடுத்து தனலட்சுமி அவரை நேரில் சந்தித்தத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தனலட்சுமி அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த போது,  அவர் தன்னுடைய சாதனையை பாராட்டி ஸ்போர்ட்ஸ் ஷூ ஒன்றை பரிசாக கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் எந்த நேரத்திலும், எந்த உதவியானாலும் தயங்காமல் தன்னிடம் கேட்க வேண்டும் என அன்பு கட்டளையும் போட்டதாக தனலட்சுமி தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் நலிந்த கலைஞர்கள் முதல், சில பிரபலங்களின் வாரிசுகள் படிப்பு செலவு வரை ஏற்று கொண்டு, தன்னால் முடிந்த பல்வேறு நல்ல விஷயங்களை, எவ்வித பிரதிபலனும் பாராமல் செய்து வரும் சிவகார்த்திகேயனின், தனலக்ஷ்மிக்கும் அதே போல் உதவி செய்து ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!