
உலகளவில் முதல் நான்கு இடத்தை தமிழ் சினிமாக்களை பிடித்துள்ளது.சமீபத்தில் உலக அளவில் பிரபலமான ஐஎம்டிபி தளம் தனது பயனாளிகளின் விருப்பத்திற்குரிய இந்தியாவின் டாப் 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னணி நாயகர்களின் 3 தமிழ் மொழி படங்கள் இடம்பெற்றுள்ளது.
அந்த பட்டியலில் 2021ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 29 வரை வெளியான படங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் டாப் 10 படங்களில் மூன்று தமிழ் படங்கள் இடம் பிடித்துள்ளது.
அதில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய் பீம். தீபாவளியையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதே அளவு சர்ச்சையிலும் சிக்கியது. இந்த படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல இந்த ஆண்டு பொங்கலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டாக உள்ள நிலையிலும் ரசிகர்கள் பார்க்க விரும்பும் படங்கள் பட்டியலில் மாஸ்டர் படம் 4வது இடத்தை பிடித்திருப்பது குறித்து ரசிகர்கள் செம குஷியாக உள்ளனர்.
இதனை தொடர்ந்து ஏழாவது இடத்தில் தனுஷின் கர்ணன் படம் இடம் பெற்றுள்ளது. இந்த படமும் உண்மை சம்பவத்தின் தழுவலாகும். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 90 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.