மெரினா புரட்சி’ படத்துக்கு தடை விதித்தது சென்சார்போர்டு!

By vinoth kumarFirst Published Oct 11, 2018, 2:23 PM IST
Highlights

தமிழகத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய மெரினா போராட்டம் குறித்து எடுக்கப்பட்ட ‘மெரினா புரட்சி’ படத்திற்கு சென்சார் போர்டு தடை விதித்துள்ளது.

தமிழகத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய மெரினா போராட்டம் குறித்து எடுக்கப்பட்ட ‘மெரினா புரட்சி’ படத்திற்கு சென்சார் போர்டு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக வீரர்கள் களமிறங்கிய போராட்டம், பின்னர் மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் என தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வால் மெரினாவில் ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு வெற்றியை பெற்றபிறகே நிறைவடைந்தது. 

இந்த மாபெரும் போராட்டம், மெரினா புரட்சி என்ற பெயரில் படமாக தயாரானது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்குகியிருக்கிறார். ஒரு பக்கம் சிவப்பு, மற்றொரு பக்கம் காளை மாடு, மாட்டின் கழுத்தில் மெரினா கடற்கரை என அழகாக ஃபர்ஸ்ட் லுக் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இயக்குநர் வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இந்நிலையில் ரிலீஸுக்கு தயாராக இருந்த ‘மெரினா புரட்சி’ படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தை வெளியிட அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

 

இதுகுறித்து செய்தி வெளியிட்ட இயக்குநர் எம்.எஸ்.ராஜ், ‘நாச்சியாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கும்தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்கள் 8 நாட்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தையும்,அதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் ’மெரினா புரட்சி’ திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை விதித்திருக்கிறது. மறு சீராய்வு குழுவில் ’மெரினா புரட்சி’ திரைப்படத்திற்கு நீதி கிடைக்கும்..உண்மை வெல்லும் என்று நம்புகிறோம்’என்கிறார்.

click me!