புரோட்டா சூரியை புரட்டி எடுத்த யோகிபாபு… படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குறாரு தெரியுமா?

Published : Oct 11, 2018, 02:14 PM IST
புரோட்டா சூரியை புரட்டி எடுத்த யோகிபாபு… படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குறாரு தெரியுமா?

சுருக்கம்

தமிழ்சினிமாவில் இன்று அதிகம் சம்பளம் வாங்கும் காமெடி நடிகர் யார் என்று சொன்னால் கொஞ்சம் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அந்த யோக நடிகர் வேறு யாருமல்ல, சூப்பர்ஸ்டார் படம் முதல் சுமார் ஸ்டார் படங்கள் ஒன்று விடாமல் நடித்துக்கொண்டிருக்கும் யோகிபாபுவேதான்.

தமிழ்சினிமாவில் இன்று அதிகம் சம்பளம் வாங்கும் காமெடி நடிகர் யார் என்று சொன்னால் கொஞ்சம் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அந்த யோக நடிகர் வேறு யாருமல்ல, சூப்பர்ஸ்டார் படம் முதல் சுமார் ஸ்டார் படங்கள் ஒன்று விடாமல் நடித்துக்கொண்டிருக்கும் யோகிபாபுவேதான். 

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் ஷங்கர் தந்திருக்கும் புகாரால்,வைகைப்புயல் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் வீட்டில் புகைந்துகொண்டிருக்க, அடுத்து நல்ல நிலையில் இருந்த பரோட்டா சூரி அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்க, காமெடியில் தனி ராஜாவாகக் கொடிகட்டிப்பறந்துகொண்டிருக்கிறார் யோகிபாபு.

கடந்த மூன்று மாதங்களில் 30 புதிய படங்கள் துவங்கப்பட்டிருக்கிறது என்றால் அதில் சுமார் இருபது படங்களிலாவது இருக்கிறார் யோகிபாபு. தற்போது சுந்தர்.சி. சிம்பு காம்பினேஷனில் லேட்டஸ்டாக கமிட் ஆகியிருக்கும் யோகிபாபுவுக்கு அப்படத்திற்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? நாள் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய். அப்படத்திற்கு 20 நாட்கள் வரை கால்ஷீட் தந்திருக்கிறார் யோகி. 

இதே தொகையை சுமார் ஆறுமாதங்கள் முன்புவரை சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த பரோட்டா சூரி, ‘சம்பளத்தை எவ்வளவு வேணும்னாலும் குறைச்சிக்கிறேன். நல்ல கேரக்டர் இருந்தா கூப்பிடுங்க பாஸ்’ என்று தெரிந்த இயக்குநர்களுக்கு தூது அனுப்பிக்கொண்டிருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

The Raja Saab OTT Release: விமர்சனங்களை மீறி ரசிகர்களை ஈர்க்கும் ‘தி ராஜா சாப்’ ! பிரபாஸ் படம் மீண்டும் பேசப்படுவதேன்?
PrakashRaj: ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ்! கங்கனாவின் விமர்சனத்திற்கு சாட்டையடி பதில்.!