பூங்கொடி டீச்சருக்காக... மாரி செல்வராஜ் பாடிய பாடல்! மனுஷனுக்கு பல திறமை இருக்கும் போலயே..! - வீடியோ

By manimegalai a  |  First Published Aug 26, 2024, 12:45 PM IST

இயக்குனர் மாரி செல்வராஜ், சிவானந்தம் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனிடம்... பூங்கொடி டீச்சர் பற்றி வர்ணிக்கும் விதத்தில் பாடியுள்ள பாடலின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 


இயக்குனர் ராமிடம் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி,  பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் மாரி செல்வராஜ், இவர் இயக்கிய முதல் படமே, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி தன்னுடைய உருக்கமான கருத்தை தெளிவாக காட்சி படுத்தி இருந்தார் மாரி செல்வராஜ்.

இதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு, நடிகர் தனுஷை ஹீரோவாக வைத்து 'கர்ணன்' படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ், இந்த படத்தில் கண்டா வர சொல்லுடா, உட்டுடாதீங்க எப்போ போன்ற பாடல்களை எழுதி இருந்தார்.  மேலும் 2023 ஆம் ஆண்டு உதயநிதியின் கடைசி திரைப்படம் என அவர் அறிவித்த 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றவர் மாரி செல்வராஜ் தான்.

Tap to resize

Latest Videos

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல..! படுக்கைக்கு அழைத்ததாக மலையாள நடிகை பரபரப்பு புகார்!

இந்த படத்தின் மூலம் அரசியலை பேசிய இயக்குனராகவும் அறியப்பட்டார். இந்த படம் நடிகர் வடிவேலுவுக்கும் திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்காக நடிகர் வடிவேலுவுக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறப்பட்டது. அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாகி வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் தான் 'வாழை'. வாழை தொழிலாளர்கள் பற்றி பலரும் அறியப்படாத துயரம் கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

காதலரை கரம்பிடித்த எமி ஜாக்சன்.. சிம்பிளாக நடந்த திருமணம் - லவ்லி கிளிக்ஸ் இதோ!

கலையரசன் கதாநாயகனாகவும், நிகிலா விமல் கதாநாயகியாகவும்  நடித்துள்ளனர். திவ்யா துரைசாமி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன் வேல் என்கிற சிறுவனை சுற்றியே இந்த கதை நகர்வது போல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' என்கிற படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில்  பூங்கொடி டீச்சர் குறித்து வர்ணிக்கும் விதத்தில், பாடியுள்ள பாடலின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

பூங்கொடி டீச்சருக்காக….. pic.twitter.com/e3Y2JhcdXe

— Mari Selvaraj (@mari_selvaraj)

 

click me!