இது ஜெயிலா இல்ல 5 ஸ்டார் ஹோட்டலா? பெங்களூரு சிறையில் ராஜவாழ்க்கை வாழும் தர்ஷன் - ஷாக்கிங் வீடியோ

By Ganesh A  |  First Published Aug 26, 2024, 10:25 AM IST

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் கன்னட நடிகர் தர்ஷன் சகல வசதிகளுடன் வாழ்ந்து வருவது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.


கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தர்ஷன். அவர் கடந்த ஜூன் 9-ந் தேதி தன்னுடைய ரசிகரான ரேணுகாசாமி என்பவரை கொடூரமாக கொலை செய்து அருகில் இருந்த பாலம் அருகே உடலை வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் தர்ஷன் தான் ரேணுகாசாமியை கொலை செய்தார் என்பதை ஆதாரத்துடன் கண்டுபிடித்தனர்.

தர்ஷனின் காதலி பவித்ரா கெளடாவுக்கு இணையத்தில் ஆபாச மெசேஜ் அனுப்பியதால் ரேணுகாசாமியை தர்ஷன் கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஜூன் மாதம் தர்ஷன், பவித்ரா கெளடா உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... இனி சரக்கு அடிச்ச செருப்பால அடிப்பேன்... ஒரே நாளில் குடிப்பழக்கத்தை கைவிட்ட ரஜினி - காரணம் யார் தெரியுமா?

சிறையில் தர்ஷனுக்கு சகல வசதியும் வழங்கப்பட்டு வருவது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தர்ஷன் சிறையில் உள்ள புல்வெளியில் தன்னுடைய சக கைதிகளுடன் ஜாலியாக அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்தபடி பேசி வருகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இது சிறையா இல்லை 5 ஸ்டார் ஹோட்டலா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சிறையில் இருந்தபடி தர்ஷன் வீடியோ கால் பேசியதும் தெரியவந்துள்ளது. அவர் வீடியோ காலில் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. ஒரு கொலை குற்றவாளிக்கு விஐபி போல் சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, ஜெயலலிதா ஆகியோர் சிறையில் இருந்தபோது சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்று வந்தார். அதுவும் இதே சிறையில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“Naa Fans kosam nenu Hero ayyanu. So jail nundi video calls chesta.” pic.twitter.com/m3fWukvBqp

— selfiewithtrain (@selfiewithtrain)

இதையும் படியுங்கள்... மாரியின் வேறமாரி சம்பவம்... பாக்ஸ் ஆபிஸில் ரஜினி பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய வாழை

click me!