Viduthalai Movie : கடந்த ஆண்டு வெளியாகி சூரிக்கு சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம்.
கடந்த 2023ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகி, மக்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் வெற்றிமாறனின் விடுதலை. விஜய் சேதுபதி, "ரங்கன்" வாத்தியாராக நடித்து அசத்தியிருந்தாலும், சூரி என்கின்ற ஆக்சன் ஹீரோ தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானது இந்த திரைப்படத்தின் மூலம் தான்.
விடுதலை திரைப்படம் வெளியான பிறகு தான் சூரிக்கு "கருடன்", "கொட்டுகாளி" மற்றும் "ஏழு கடல் ஏழுமலை" உள்ளிட்ட திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. இந்த திரைப்படங்களில் வழக்கமான தனது காமெடி இல்லாமல், ஒரு ஆக்சன் ஹீரோவாக அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் விடுதலை திரைப்படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் உருவாக துவங்கியது.
கோளாறான டிரஸ்.. கவர்ச்சி அலை வீசும் டானாக மாறிய நடிகை திவ்ய பாரதி - ஹாட் பிக்ஸ்!
விடுதலை படத்தின் முதல் பாக பணிகள் முடிந்த உடனேயே அப்படத்தின் இரண்டாம் பாக பணிகள் துவங்கினாலும், கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை தொடர்ச்சியாக இயக்கி வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடித்த வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்த ஒரு புதிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
தற்பொழுது எடுக்கப்பட்டுள்ள விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 4 மணி நேரங்களையும் கடந்து செல்வதால், அதனை மீண்டும் இரண்டு பாகங்களாக பிரித்து வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும், ஆகையால் முழு பணிகளும் முடிந்த பிறகு விடுதலை படத்தில் இரண்டாம் பாகம், அதை தொடர்ந்து 3ம் பாகமும் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த விஷயம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இப்பட பணிகளை முடிக்கும் இயக்குனர் வெற்றிமாறன், விரைவில் தனது வாடிவாசல் பட பணிகளை துவங்குவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார் என்ற வதந்திகள் பரவி வந்த நிலையில், அவற்றை மறுத்து அறிக்கை வெளியிட்டார் படத்தில் தயாரிப்பாளர் கலைப்புழு தாணு.
தங்க சிலை போல் இருக்கும் நடிகை ரேவதியின் மகள் மகி! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!