எம்.ஜி.ஆர் முதல் சிம்பு வரை.. பிரபல நடிகர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த பிளாக்பஸ்டர் படங்கள்!

By Asianet Tamil  |  First Published Aug 23, 2024, 7:05 PM IST

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தராது. இந்த பதிவில் எந்தெந்த நடிகர்களுக்கு எந்த படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று பார்க்கலாம்.


பொதுவாக நடிகர்களுக்கு முதல் படமே மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமையாது. சிலர் மட்டுமே கெரியரின் தொக்கத்திலேயே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வருவார்கள். பெரும்பாலான நடிகர்களுக்கு தங்கள் தங்கள் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ஒரு படம் அமையும். அந்த வகையில் எந்தெந்த நடிகர்கள் எந்த படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

எம்.ஜி.ஆர்

Tap to resize

Latest Videos

புரட்சி தலைவர், மக்கள் திலகம் என ரசிகர்களால் போற்றப்பட்ட எம்.ஜிஆருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது 1954-ம் ஆண்டு வெளியான மலைக்கள்ளன் படம் தான். நாமக்கல் கவிஞர் எழுதியிருந்த இந்த கதைக்கு மு.கருணாநிதி திரைக்கதை எழுதி இருந்தார். ஸ்ரீராம்லு நாயுடு இந்த படத்தை இயக்கி இருந்தார். எம்.ஜி.ஆர், பானுமதி நடிப்பில் ஆக்ஷன் படமாக உருவான இந்த படம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. 

சிவாஜி :

நடிகர் திலகம், செவாலியர் என்று ரசிகர்களால் போற்றப்படும் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகில் பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் தான் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. கருணாநிதி திரைக்கதை எழுதிய இந்த படத்தை கிருஷ்ணன் – பஞ்சு என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கினர். 175 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாகவும் மாறியது. இந்த படத்தின் வசனங்கள் ட்ரெண்ட் செட்டராக அமைந்தன.

ஜெமினி கணேசன் :

காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது கணவனே கண்கண்ட தெய்வம் படம் தான். ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை டி.ஆர் ரகுநாத் இயக்கி இருந்தார். 1955-ம் ஆண்டு ஃபேண்டஸி படமாக உருவான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பிளாக்பஸ்டர் படமாக மாறியது. 

ரஜினிகாந்த் :

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் முள்ளும் மலரும். ரஜினிகாந்த், சரத்பாபு, ஜெயலக்ஷ்மி, ஷோபா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் ரஜினியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவிற்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

தல.. தளபதி மிஸ் பண்ண படங்கள் - அதுவும் சூப்பர் ஹிட்டான படங்கள் பற்றி தெரியுமா?

கமல்ஹாசன் :

பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான படம் 16 வயதினிலே. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, காந்திமதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக மாறியது. கமல்ஹாசனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

விஜயகாந்த் :

விஜயகாந்த் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாறிய படம் என்றால் அது சட்டம் ஒரு இருட்டரை படம் தான். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட்டானது.  இப்படம் விஜயகாந்தி திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. 

அர்ஜுன்

1981-ம் ஆண்டு கன்னட திரையுலகில் அறிமுகமானவர் அர்ஜுன். கன்னடத்தில் சில படங்களில் நடித்த அவர் நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் அவர் நடித்து வந்தார். தமிழில் அவருக்கு பிரேக் த்ரூவாக அமைந்த படம் என்றால் அது சங்கர் குரு. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் அர்ஜுன் நடித்தார்.

பிரசாந்த்

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்த நிலையில் வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, திருடா திருடா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் பிரசாந்தின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது ஜீன்ஸ் தான். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

விஜய்

நாளைய தீர்ப்பு மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் விஜய். இதை தொடர்ந்து ரசிகன், செந்தூரப்பாண்டி என சில படங்கள் வெற்றி பெற்றது. ஆனால் விஜயின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் அது பூவே உனக்காக படம் தான்.  விஜய், சங்கீதா, அஞ்சு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது. 

அஜித் :

அமராவதி படத்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமான அஜித்திற்கு இந்த சுமாரான வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து சில படங்களில் அவர் நடித்திருந்தார். ஆனால் அஜித்தின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது ஆசை தான். வசந்த் இயக்கத்தில் அஜித், சுவலட்சுமி, ரோஹினி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோ நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் படமாக மாறியது. 

விக்ரம் :

1990களின் தொடக்கத்தில் இருந்தே நடிகர் விக்ரம் பல படங்களில் நடித்தார். இதில் மீரா உள்ளிட்ட சில படங்கள் தான் ஓரளவு வெற்றி பெற்றது. ஆனால் விக்ரமின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது 1999-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான சேது படம். விக்ரம், அபிதா குஜலாம்பாள், சிவ குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

உயிரை கொடுத்து உழைத்த கமலின் டாப் 4 படங்கள்.. ஆனா வணிக ரீதியா ஹிட் இல்ல - காரணம் ரஜினியா?

சூர்யா :

1997-ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் அது பாலா இயக்கத்தில் வெளியான நந்தா தான். சூர்யா, லைலா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தனுஷ் :

2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் தனுஷ். இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது. 2003-ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தின் மூலம் செல்வராகவன் இயக்குனராக அறிமுகமானர். இந்த படம் தான் தனுஷின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்பு :

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சிம்பு, காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தம், கோவில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும் சிம்புவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது மன்மதன் படம். சிம்பு, ஜோதிகா, சிந்து துலானி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. சிம்பு கதை எழுதிய இந்த படத்தை ஜே. முருகன் இயக்கி இருந்தார்.

click me!