டேங்கர் லாரியில் மோதிய பிரபல பின்னணிப் பாடகியின் கார்....சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்...

Published : Nov 15, 2019, 12:27 PM ISTUpdated : Nov 15, 2019, 12:36 PM IST
டேங்கர் லாரியில் மோதிய பிரபல பின்னணிப் பாடகியின் கார்....சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்...

சுருக்கம்

அப்போது அவர்களது கார் கட்டுப்பாடு இழந்து சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியதில் கீதாவும் அவரது கணவரும் படுகாயமுற்றனர். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே கீதா மாலி இறந்து விட தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது கணவர் ரவி மாலி உயிருக்குப் போராடி வருகிறார்.

விமான நிலையத்திலிருந்து காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரபல மராத்தி பின்னணிப் பாடகி பயங்கர விபத்து ஒன்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பயணித்த அவரது கணவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாசிக் நகரை சொந்த ஊராகக் கொண்டவர் பாடகி கீதா மாலி. தனி ஆல்பங்கள் பலவற்றில் பாடியுள்ள கீதா, பல மராத்திப் படங்களிலும் பின்னணி பாடியுள்ளார். தனது கணவர் ரவி மால்யுடன் அமெரிக்கா சென்றிருந்த அவர் நேற்று விமான நிலையத்திலிருந்து மும்பை,ஆக்ரா நெடுஞ்சாலை வழியாக தனது சொந்த ஊரான நாசிக்குக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களது கார் கட்டுப்பாடு இழந்து சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியதில் கீதாவும் அவரது கணவரும் படுகாயமுற்றனர். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே கீதா மாலி இறந்து விட தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது கணவர் ரவி மாலி உயிருக்குப் போராடி வருகிறார்.

கீத் கங்கா மியூசிக்கல் பேண்ட் என்ற பெயரில் தனி இசைக்குழுவும் வைத்திருந்த கீதா, திரைப்பாடல்கள், தனி ஆல்பங்கள் போக நிறைய மராத்தி பக்திப் பாடல்களும் பாடியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!