நடிகர் மன்சூர் அலிகான் - த்ரிஷா விவகாரம் நேற்றைய தினம் ஓய்ந்த நிலையில் தற்போது மற்றொரு அறிக்கை வெளியிட்டு, மன்சூர் அலிகான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த அறிக்கை அரசியல் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் கர்நாடக நதி நீர் பிரச்சனை மற்றும் தமிழகத்தில் இருந்து ஆத்து மணல் திருடப்பட்டு, கேரளா - கர்நாடகாவுக்கு எடுத்து செல்லப்படுவது போன்ற பல பச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். அம்பானி - அதானியை கூட விட்டு வைக்காமல் வெளுத்து வாங்கியுள்ள மன்சூர் அலிகான் அறிக்கை இதோ...
பக்தனால் கடவுளின் மனம் குளிர்ந்தது. இனி விவசாயிகள் நிலம் பறிக்கப்படாது. நிலக்கரி சுரங்கத்திற்கென நிலம் புதிதாக எடுக்கப்படாது. 1% N.L.C. மின்சாரம். தமிழ்நாடு பயன்படுத்துகிறது. 1018.%கர்நாடகம் செலவழிக்கிறது. சர்வே ரிப்போர்ட்.. கர்நாடகாவின் அனைத்து அணைகளும் நிரம்ம்ம்......பி வழிகின்றன. தமிழக ஆறுகளின் அடி மட்ட மண் யாவும். கேரளா, கர்நாடகாவுக்கு டன், டன்னாய் லாரிகளில் விற்க்கப்படுகிறது. அழகான கடவுளின் மனம் குளிர்ந்தது.
80s Buildup Day 1 Collection: சந்தானத்தின் 80ஸ் பில்டப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
துத்துக்குடியில் 13 பேரை சுட்ட போலி...(லி) ஸார் கடவுள் தூக்கிலே போடும். காவிரி டெல்டா விவசாய மண் யாவும் மீற்கப்படும். நெடுவாசல் நிறைய சேரி மக்கள் போராடிக்கொண்டே இருக்க, அதானி துறைமுகங்களில், ஏர்போர்ட் வழியாக நித்தம் டன்டன்னாக தங்கமும், கோகனும் கடத்திவரப்பட்டு கள்ளச்சந்தையில் விற்று உலகின் No 1. பணக்காரர்...அதானி, அம்பானி | நாம்...அம்பாளை கும்பிடும் ... வெறும் அம்பாநீ .....உப்பு தின்றவன். தண்ணி குடிக்கனும். யாம் அனுப்பியது கடிதம் அல்ல. அறிக்கை!!
எமை ஆதரித்த யாவோரும் ... முதல் உதிர்த்தவார்த்தை மன்சூரலிகான் செய்த தவறு. எனவே இறையச்சத்தோடு வருந்த வேண்டும். முன்னுதாரணமாக திகழ.. வேண்டி. யாம் பத்திரிக்கைக்கு அனுப்யது அறிக்கை. கடவுள் மனம் குளிர்ந்தது. 5 மாநிலத்தில் "கை" வெல்கிறது ஆறு மாதத்தில் "இ.ந்.தி.யா" வெல்கிறது.. Cast census மூலம் யாவோர்க்கும்.. வேலைவாய்ப்பு.. அழகிய கடவுளே பொதுச்சொத்தை அதனானிக்கு விற்றவர்களை தண்டிப்பாயாக!. சேரிப் புயல் திருமா... ஆதித்தமிழன் சமூகநீதி நிலைநாட்டிய அயோத்திதாஸ பண்டிதர் புகழ் ஓங்குக .....பாம்பை.....? கண்டவனுக்கு மட்டுமல்ல... அனைவர்க்கும் தர்ஷனம் தருவாயாக...... அரோகரா! யாம் அனுப்பியது கடிதம் அல்ல! என்று இந்த அறிக்கையில் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D