பட்ஜெட் 5 கோடி.. ஆனால் வசூல்? பல மடங்கு லாபத்துடன் மாஸ் காட்டும் Manjummel Boys - லாபம் எத்தனை கோடி ஹெரியுமா?

Ansgar R |  
Published : Mar 11, 2024, 09:55 PM IST
பட்ஜெட் 5 கோடி.. ஆனால் வசூல்? பல மடங்கு லாபத்துடன் மாஸ் காட்டும் Manjummel Boys - லாபம் எத்தனை கோடி ஹெரியுமா?

சுருக்கம்

Manjummel Boys Box Office Collection : மலையாள மொழியில் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியாகி தமிழகம் உட்பட உலக அரங்கில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் தான் Manjummel Boys.

இயக்குனர் சிதம்பரம் எஸ் படுவாள் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு "குணா குகையில்" நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பல இளைஞர்களுக்கு தங்களுடைய நட்பு வட்டாரத்தினுடனான அந்த ஈர்ப்பை உணர்த்தும் ஒரு திரைப்படமாக இந்த படம் அமைந்திருந்தது. 

அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் "குணா" திரைப்படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் என்கின்ற பாடலின் சில வரிகளை இந்த படத்திற்கு ஏற்றவாறு காட்சி அமைப்புகளோடு வெளியானது இந்த படத்தினை சூப்பர் ஹிட்டாக வைத்தது என்றால் அது மிகையல்ல. உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பல்வேறு பிரபலங்களும் படக் குழுவை நேரில் அழைத்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

கமல்ஹாசனை தொடர்ந்து.. நடிகர் சங்க கட்டிட பணிக்கு ரூ.1 கோடியை அள்ளிக்கொடுத்த தளபதி விஜய்!

இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 18 நாட்கள் முடிந்துள்ள நிலையில் உலக அளவில் இந்த திரைப்படம் வசூல் செய்துள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சுமார் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அரங்கில் 150 கோடியையும் தாண்டி வசூல் செய்து வருகின்றது. 

இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 35 கோடி வசூல் பெற்றுள்ளது, குறைந்த பட்ஜெட்டில் பல மடங்கு வசூல் கொடுத்துள்ள இந்த படம் மலையாள திரையுலகில் 100 கோடி என்ற வசூல் சாதனையை முறியடித்த படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அஜித்.. Foot Ball கிரவுண்டில் மனைவி மற்றும் நண்பர்களுடன் அரட்டை - Viral Video!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்
நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!