எல்லை மீறும் ரசிகர்கள்.. ரத்தம் வரும் அளவிற்கு தாக்கிக்கொண்ட இரு டாப் ஹீரோஸின் Fans - வைரலாகும் வீடியோ!

Ansgar R |  
Published : Mar 11, 2024, 04:56 PM IST
எல்லை மீறும் ரசிகர்கள்.. ரத்தம் வரும் அளவிற்கு தாக்கிக்கொண்ட இரு டாப் ஹீரோஸின் Fans - வைரலாகும் வீடியோ!

சுருக்கம்

Top 2 Heroes Fans : தென்னிந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இரு நடிகர்களுடைய ரசிகர்கள் பொதுவெளியில் ரத்தம் வரும் அளவிற்கு தாக்கி கொண்ட சம்பவம், வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நடிகர் உச்ச நடிகராக மாறுவதற்கு ஒரே காரணம் அவருடைய ரசிகர்கள் என்றால் அது சற்றும் மிகையல்ல. எவ்வளவு தான் திறமை இருந்தாலும், ரசிகர்களின் வரவேற்பே ஒருவரை நாடாளச் செய்யும் அளவிற்கு உயர்த்துகிறது. ஆனால் அதுவே இருபெரும் நடிகர்கள் என்று வரும் பொழுது, அந்த இருபெரும் நடிகர்களின் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் சண்டைகள் தொடர்ச்சியாக ஏல துவங்குகிறது. 

கோலிவுட் உலகை பொறுத்தவரை ரஜினி, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே தான் பெரிய அளவில் சண்டை மூளும். ஆனால் அதுவும் இணைய வழியில் தான் நடக்கும். கொச்சையான வார்த்தைகள், எடிட் செய்யப்பட்ட வீடியோகள் என்று இணைய வழியில் சாண்டியிடுவது ரசிகர்களுக்கு ஒரு அன்றாட பொழுதுபோக்காகவே மாறியுள்ளது.  

விவாகரத்துக்கு பின்பும் நடிகை மீது தீராக்காதல்! சூரிய கிரணின் மனைவி மற்றும் தங்கை இருவருமே பிரபலங்களா?

ஆனால் தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை இணைய வழி சண்டையை அடிதடியாக மாற்றிக்கொண்டதில்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் தெலுங்கு ரசிகர்கள் இடையே நடந்துள்ளது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகிய இரு நடிகர்களுடைய ரசிகர்கள் ஒரு இடத்தில் விளையாடி கொண்டிருந்துள்ளனர். 

அப்பொழுது வாய் வார்த்தையாக ஆரம்பித்த சண்டை இறுதியில் பெரும் கைகளைப்பாக மாறி உள்ளது. இதில் அல்லு அர்ஜுனன் ரசிகர்கள், பிரபாஸின் ரசிகர் ஒருவரை அடித்து சட்டையை கிழித்தது மட்டும் இல்லாமல் அவருக்கு ரத்தம் வரும் அளவிற்கு அவரை மிருகத்தனமாக தாக்கியுள்ளனர். அது மட்டும் அல்லாமல் "ஜெய் அல்லு அர்ஜுன்" என்று அவரை கூறும்படி வற்புறுத்தியுள்ளனர்.

 

இது குறித்து தற்பொழுது புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கு நடந்து வருகிறது. திரையில் தோன்றும் நடிகர்களை திரையில் மட்டும் கொண்டாடாமல், தங்கள் வாழ்க்கையின் நாயகனாக ஏற்றுக்கொண்டு இப்படி சண்டையில் இறங்கி ஒருவரை ஒருவர் ரத்தம் வரும் அளவிற்கு தாக்கிக்கொள்ளும் கலாச்சாரம் மாற வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலை முதல் கால் வரை.. கொள்ளை அழகில் கொள்ளைகொள்ளும் சோபிதா துலிபாலா - மின்னும் அவர் அழகின் ரகசியம் என்ன?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்
நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!