குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் இயக்குனராக மாறிய நடிகர் சூரிய கிரண் திடீர் என மரணமடைந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சூரிய கிரண். மௌன கீதங்கள், படிக்காதவன், போன்ற ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மாஸ்டர் சுரேஷ் என்கிற பெயரில் சிறு வயதில் நடித்து வந்தாலும், பின்னர் சூரிய கிரண் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டு, தெலுங்கில் சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கினார். தற்போது நடிகர் வரலட்சுமி சரத்குமார் நடித்து முடித்துள்ள 'அரசி' படத்தை இயக்கியுள்ளார்.
undefined
இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சமீப காலமான உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த சூரிய கிரண் இன்று காலமானார்.இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சமீப காலமான உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த சூரிய கிரண் இன்று காலமானார். அதாவது அவர் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை காரணமாக ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.. மஞ்சள் காமாலை அதிகமானதன் காரணமாக இன்று வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், காலை 11 மணிக்கு காலமானார். 48 வயதில் இவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விரும் (நந்தி அவார்டு) பெற்றவர். இவரது மறைவு ஒட்டு மொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.