
தொடர் வெற்றி படங்களைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படத்தைத் தூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில்உ தயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் சூரி, ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சென்னை, அலஹாபாத், ஹத்ராபாத், பெங்களூரு, திருவண்ணாமலை, ஓமன் எனப் பல இடங்களில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பெயர் மற்றும் இசை வெளியீடு மற்றும் படம் வெளியீடு தேதிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.