திருமணத்திற்கு பின் குப்பை கதையில் 'மனிஷா யாதவ்'...! கண்கலங்கிய நடன இயக்குனர்...!

Asianet News Tamil  
Published : May 17, 2018, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
திருமணத்திற்கு பின் குப்பை கதையில் 'மனிஷா யாதவ்'...! கண்கலங்கிய நடன இயக்குனர்...!

சுருக்கம்

manisha yadav after marriage acting in kuppaikkathai movie

பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பைக் கதை'.  இந்த படைத்தில் சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்துக்கொண்ட நடிகை மனிஷா யாதவ் ,கதாநாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை, அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். 

தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்..

மே-25ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. 
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடன இயக்குனர் தினேஷ் கூறியபோது...“இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கையில நடக்கும்னு நினைச்சே பார்க்கலை. இந்தப்படத்தில என்னை ஹீரோன்னு சொல்லாதீங்க..

என்னைய ஹீரோவா போட்டா என் உயரத்துக்கு கதாநாயகியே கிடைக்காதுன்னு டைரக்டர்கிட்ட சொன்னேன்.. என் மனைவியுடன் கலந்து ஆலோசித்த பின்பே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்..

கதை, ஒரு மாதிரியான கதைதான்.. டான்ஸ் அப்படி இப்படின்னு இருந்தா வேண்டாம்னு சொல்லிருப்பேன். என் வாழ்க்கையில் இது மறக்கமுடியாத நாள்.

ஆர்யா, கார்த்தியெல்லாம் கூப்பிட்ட அடுத்த நொடி எப்போ மாஸ்டர் வரணும்னு கேட்டு எனக்கு முன்னாடி வந்து உட்கார்ந்திருக்காங்க. யாரும் இல்லை சினிமாவுலன்னு நினைச்சேன். ஆனால் இந்த நிகழ்வு நாங்க இருக்கோம்ணு ஹீரோக்களும், இயக்குநர்களும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள் எனக் கண்கலங்கினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pragya Nagra : அம்மாடியோ!! இம்புட்டு அழகா? மணக்கோலத்தில் நடிகை பிரக்யா நக்ரா.. கலக்கல் கிளிக்ஸ்!
பேபி கேர்ள் விமர்சனம்... நிவின் பாலி படம் மாஸ்டர் பீஸா? டம்மி பீஸா?