ஒரே வாரத்தில் ரூ.300 கோடியை தாண்டிய வசூல்... பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த வசூல் நிலவரம் இதோ

By Ganesh A  |  First Published Oct 7, 2022, 12:49 PM IST

Ponniyin selvan : தமிழ் சினிமா வரலாற்றி ரஜினியின் 2.0, விஜய்யின் பிகில், கமலின் விக்ரம் ஆகிய படங்கள் மட்டுமே ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. 


மணிரத்னம் - லைகா கூட்டணியில் வெளியான பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் கடந்த வாரம் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. வெளியானது முதல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. 

தமிழகத்தில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலை தாண்டிய படம் என்கிற சாதனையை படைத்த இப்படம் தற்போது உலகளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி மணிரத்னம் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் தயாரிப்பாளருடன் அடுத்தடுத்து 2 படங்கள்... ரஜினியின் கால்ஷீட்டை கொத்தாக தட்டித்தூக்கிய லைகா

இதுவரை தமிழ் சினிமா வரலாற்றி ரஜினியின் 2.0, விஜய்யின் பிகில், கமலின் விக்ரம் ஆகிய படங்கள் மட்டுமே ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இந்நிலையில், ஒரே வாரத்தில் ரூ.308 கோடி வசூலித்த இப்படம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தொகை வசூலித்தது என்பதை காணலாம்.

முதல் நாள் - ரூ.78.29 கோடி
இரண்டாம் நாள் - ரூ.60.16 கோடி
மூன்றாவது நாள் - ரூ.64.42 கோடி
நான்காவது நாள் - ரூ.25.37 கோடி
ஐந்தாவது நாள் - ரூ.30.21 கோடி
ஆறாவது நாள் - ரூ.29.40 கோடி
ஐந்தாவது நாள் - ரூ.20.74 கோடி
மொத்தம் - ரூ.308.59 கோடி

Success beyond boundaries!

Thank you for this tremendous response ❤️ 🔥 pic.twitter.com/XMdztUnkGc

— Lyca Productions (@LycaProductions)

இதையும் படியுங்கள்... தளபதி 67-ல் ரோலெக்ஸ்... மீண்டும் நேருக்கு நேர் மோத உள்ள விஜய் - சூர்யா?

click me!